×

மார்த்தாண்டத்தில் இளம்பெண்ணுடன் ஏட்டு ஆபாச வீடியோ சாட்டிங்: ஆயுதப்படைக்கு மாற்றம்

மார்த்தாண்டம், பிப்.16:குமரியில் இளம்பெண்ணுடன் ஆபாச வீடியோ சாட்டிங்கில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டுவை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஏட்டு ஒருவர் சமீபத்தில் களியக்காவிளை காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் சோதனைச்சாவடிகளில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் சம்பந்தப்பட்ட ஏட்டு மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வழக்கு சம்பந்தமாக வந்துள்ளார். அப்போது 2 பேரும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களுக்கு இடையே தொடர்பு ஏற்பட்டு உள்ளது.

நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் தனிமையில் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். அத்துடன் மணிக்கணக்கில் செல்போனிலும் பேசி வந்துள்ளனர். மேலும் வீடியோ கால் செய்து அதில் கிளுகிளுப்பாக பேசியதாக தெரிகிறது. இந்தநிலையில் இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு ஏட்டுவுடனான தொடர்பு குறித்து தெரியவந்தது. மேலும் அந்த ஏட்டு, பெண்ணுடன் பேசிய ஆபாச கிளுகிளுப்பு வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்து மாவட்ட எஸ்.பி ஸ்டாலினுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து எஸ்.பி. உத்தரவின்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து சர்ச்சைக்குள்ளான போலீஸ் ஏட்டுவை நாகர்கோவில் ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றி எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஏட்டு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. வழக்கு சம்பந்தமாக காவல் நிலையத்துக்கு வந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு தகாத உறவில் இருந்த ஏட்டு சிக்கிய சம்பவம் போலீசார் இடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags : Marthandam ,S.P. Stalin ,Kumari ,Marthandam police station ,Kaliyakavilai police station ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்