×

4 முறை திருமணம் செய்துள்ளேன்; விபசாரத்தில் தள்ள முயன்றதால் தாயை எரித்து கொலை செய்தேன்: மகள் பகீர் வாக்குமூலம்

திருமலை: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சட்டெனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரமாதேவி. இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு லட்சுமி என்ற மகள், ஒரு மகன் உள்ளனர். இதில் மகன் சில ஆண்டுகளுக்கு முன் மாயமாகிவிட்டார். லட்சுமிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயவாடாவை சேர்ந்த சீனிவாசராவ் என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த 7ம் தேதி மாலை ரமாதேவி தனது வீட்டில் தீயில் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார். போலீசார் சென்று விசாரித்ததில், அவரது மகள் லட்சுமி, ரமாதேவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து லட்சுமியிடம் விசாரணை நடத்தினர். இதில் தாயை எரித்துக்கொன்றது தெரியவந்தது.

லட்சுமி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: நான் குழந்தையாக இருந்த காலத்தில் இருந்தே, எனது தாயார் ரமாதேவியின் நடத்தை சரியில்லை. இதனால் எனது தந்தை தற்கொலை செய்துகொண்டார். இருப்பினும் எனது தாய் தொடர்ந்து தவறான நடத்தையில் இருந்து வந்தார். இதனால் எனது அண்ணனும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். தாயின் நடத்தை காரணமாக எனக்கு இதுவரை 4 முறை திருமணம் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் எனது கணவர்கள், தாயின் நடத்தை காரணமாகத்தான் என்னை பிரிந்து செல்வதாக கூறுவார்கள்.

கடந்த சில மாதங்களாக எனது கணவரை பிரிந்துவிட்டு வந்து விபசாரம் செய்யுமாறு என்னை வற்புறுத்தி வந்தார். நான் மறுத்ததால் என்னை துன்புறுத்தினார். விபசாரத்தில் ஈடுபட்டால் எனது குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், எனது தாயை கொல்ல முடிவு செய்தேன். கடந்த 8ம் தேதி மயக்க மாத்திரைகளை டீயில் கலந்து கொடுத்தேன். அதை குடித்த அவர், சிறிது நேரத்தில் தூங்கிவிட்டார். பின்னர் பெட்ரோல் வாங்கி வந்து தூங்கிக்கொண்டிருந்தவர் மீது ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றேன். இவ்வாறு தெரிவித்தனர். இதையடுத்து லட்சுமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Bakir ,Thirumalai ,Ramadevi ,Chatenapalli ,Guntur district ,AP ,Lakshmi ,
× RELATED பெரம்பூர் பகுதியில் நகை திருடிய பெண் கைது