×

ஒரு சதவீத ஓட்டு கூட விஜய்க்கு கிடையாது: ஒன்றிய அமைச்சர் கதம்…கதம்…

கோவையில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று அளித்த பேட்டி: இன்னும் 2 மாதம் தான். பாஜ, அதிமுக கூட்டணி ஆட்சி அமையும். விஜய் தனக்கு 30 சதவீதம் வாக்கு இருப்பதாக கூறுவதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? யாராவது சர்வே எடுத்து உள்ளார்களா, எந்த சர்வேவும் கிடையாது. விஜய் ஒரு சதவீதம் ஓட்டு வாங்குவாரா என்று பார்க்கலாம். விஜய் தனது கட்சியில் கவனம் செலுத்த வேண்டும். எங்கள் கட்சி கூட்டத்திற்கு 5 லட்சம் பேர் வந்தார்கள். ஒழுக்கம், கட்டுப்பாடுடன் இருந்தார்கள். அதனை புதியதாக வரும் கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும். விஜய் கட்சிக்கு பல்வேறு கட்டுப்பாடு போடுவதாக கூறப்படுவது, சும்மா சொல்ல வேண்டும் என சொல்லி கொண்டு இருக்கிறார்கள் தவெக, பாஜவின் பி டீம்மா என்பது விஜய்யிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்றார். தொடர்ந்து, மாநில தலைவர் நயினார் நாகேந்தின் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய், திரிஷாவை விட்டு முதலில் வெளியே வர வேண்டும் என விமர்சனம் செய்தாரே, இதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை.

* கண்டவங்களுக்கும் பதில் சொல்லணுமா: விஜய்யை விளாசிய செல்லூர் ராஜூ
அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘விஜய்யை பற்றி பேசினால், அதை தான் பிரேக்கிங் நியூஸா போடுவீங்க. ஏப்பா, நாங்க நேருக்கு நேரா திமுகவோடு மோதுகிறோம். உலகம் சுற்றும் வாலிபன் படத்துல வரும் எம்ஜிஆர் போல தான் எடப்பாடி’’ என்றார். ‘‘அதிமுகவினர் அவர்களது தலைவர்களின் கொள்கையை மறந்து விட்டனர் என விஜய் பேசியுள்ளாரே’’ என கேட்டதற்கு, ‘‘கண்டவங்க (விஜய்) பேசுவதெற்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை. இங்கு கிளைமேக்ஸ் வந்துருச்சு… எம்ஜிஆருக்கும் நம்பியாருக்கும் தான் போட்டியே. மற்றதை எல்லாம் போகும்போதே தட்டிவிட்டுட்டு போகணும். ஆயிரம் பேரு ஆயிரம் சொல்வாங்க, அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா? தேவையில்லாமல் வம்பிழுத்து விடாதீங்கப்பா’’ என்றவாறு கும்பிடு போட்டு சிரித்தபடி கிளம்பினார்.

Tags : Vijay ,Union Minister ,Kadam ,Union Minister of State ,L. Murugan ,Coimbatore ,BJP ,AIADMK ,government ,
× RELATED மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்: பாமக தலைவர் அன்புமணி