- பாஹியா
- நய்யர்
- செங்கோட்டையன் நக்கிள்
- கோபி
- தகெகா
- தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர்
- கே. ஏ. செங்கோட்டயன்
- நயினார் நாகேந்திரன்
- தவேகா
- விஜய்
- திரிஷா
- பாஜா
கோபியில் நேற்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டியளித்தார். அப்போது, நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து கூறியது பற்றிய கேள்விக்கு, ‘பாஜ எல்லாம் ஒரு கட்சி. நயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா’ என்றார். தமிழக அரசு மகளிர் உரிமைத்தொகை 5,000 ரூபாய் வழங்கியது குறித்து கேட்ட போது, “அதற்கு தவெக தலைவர் விஜய் நேற்றே தெளிவாக கூறி இருக்கிறார். எனது கருத்தும் அதே தான்’’ என்றார்.
* ஒரு முறை தான் பேச முடியும்: சொல்கிறார் நயினார் சென்னை
தி.நகரில் நடந்த பாஜ நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் வெளியே வந்த பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனிடம் நிருபர்கள், ‘ஏர்ப்போர்ட் விசயத்தில் எல்லாரும் கண்டனம் தெரிவித்து கொண்டிருக்கிறார்களே’’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு நயினார் நாகேந்திரன், ‘‘ஒருமுறை தான் பேச முடியும்’’ என்று மட்டும் சொல்லி விட்டு காரில் புறப்பட்டு சென்றார்.
* நடிகையை பேசுவது நயினார் பாணி: – ஜி.கே.வாசன் சப்போர்ட்
கோவை சூலூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: தமாகா வெற்றியை உறுதி செய்ய கொங்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. சட்டமன்றத்தில் கொங்கு மண்டலத்தில் இருந்து உறுப்பினர்கள் சென்று குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் அதிமுக தலைமையில் தேஜ கூட்டணி வெற்றி பெறும். தமிழக அரசு மகளிர் உரிமை தொகை மாதம் மாதம் கொடுக்கிறது. இதற்கு தேஜ கூட்டணி கட்சிகள் எதிரிகள் அல்ல. அதிமுக தேர்தல் அறிக்கையில் ரூ.2000 கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். தேஜ கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும். தேர்தல் தேதி அறிவிப்பிற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. வேட்பாளர்கள், தொகுதிகள் அறிவிப்பு அதன் பின்பே இருக்கும். தமிழகத்தில் 4 மண்டலத்தில் தமாகா குரல் ஒலிக்க வேண்டும். நடிகை குறித்து நயினார் நாகேந்திரன் பேசி இருப்பது அவருடைய பாணி. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
* ரீல்ஸ் ராணி டிடிவியின் ‘சீக்ரெட் செல்’
ஸ்லீப்பர் செல் என்ற வார்த்தையை தமிழ்நாட்டு அரசியலில் அறிமுகப்படுத்தியவரும், அதிகம் பயன்படுத்தியவரும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தான். கடந்த 2017ல் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, ஆட்சியில் இருந்த அதிமுகவில் தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பலர் தனக்கு ஸ்லீப்பர் செல்லாக இருப்பதாக தொடர்ந்து கூறி வந்தார். அதனால் பெரும் மாற்றம் நிகழ்ந்ததோ இல்லையோ, அவர் கூறிய ஸ்லீப்பர் செல் என்ற வார்த்தை பிரபலமானது. இதனால் ஸ்லீப்பர் செல்களை ஆங்காங்கே அனுப்புவதில் கில்லாடி நம்ம அண்ணன் என கூறி வந்த அக்கட்சியினர், தற்போது மீண்டும் அதே வேலையை துவங்கி உள்ளதாக கூறுகின்றனர்.
கடந்த 6ம் தேதி அவரது சித்தி சசிகலாவை மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்த ஜீவிதா நாச்சியார் சந்தித்து பேசினார். அமமுகவில் மாநில மாணவியர் அணி செயலாளராக இருந்த அவர், ரீல்ஸ் மூலம் பிரபலமானவர். அமமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் பேசும் அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்தார். எனது அன்பு மகள் என்றே மேடைகளில் அழைத்து வந்தார். அந்தளவிற்கு அமமுகவில் அதிகாரத்தில் இருந்தவர், தனது சித்தி சசிகலாவை சந்தித்ததற்காக கட்சியிலிருந்து நீக்கும் அளவிற்கு சென்றார்.
ஆனால், சசிகலாவை சந்தித்தது குறித்து, ‘‘சசிகலா அம்மா வேறு… டிடிவி சார் வேறு அல்ல’ என்றார் ஜீவிதா. அப்படிப்பட்டவரை கட்சியில் இருந்து நீக்கினார் டிடிவி. இவர் தற்போது சசிகலா மூலம் திருமங்கலம் தொகுதியில் ேபாட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. இவர், டிடிவி.தினகரனின் ஸ்லீப்பர் செல்லாக சசிகலாவிடம் போய் இருக்கிறார் என்கின்றனர் குக்கர் தரப்பினர். திருமங்கலம் தொகுதி அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமாரின் தொகுதி. தன்னை மிகவும் கடுமையாக விமர்சித்து வந்த உதயகுமாருக்கு செக் வைக்கவே இந்த சீக்ரெட் பிளான் என்கின்றனர். இதன்மூலம் குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகள் எப்போதும் எங்களுக்கு பின்னால் உள்ளது என்பதை, அதிமுக தலைமை தரப்புக்கு சுட்டிக்காட்டிடும் வகையிலும் ஜீவிதாவை களமிறக்க நேரடியாக சசிகலாவும், மறைமுகமாக டிடிவி.தினகரனும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர் மதுரை மாவட்ட குக்கர் கட்சியினர்.
