×

மேலூர் அருகே டிரான்ஸ்பார்மரை உடைத்து தாமிர கம்பிகள் திருட்டு

மேலூர், பிப். 14: மேலூர் அருகே டிரான்ஸ்பரை உடைத்து அதிலிருந்து தாமிர கம்பிகள் மற்றும் இதர பாகங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். மேலூர் அருகே கருங்காலக்குடி மின் பிரிவுக்கு உட்பட்ட நாட்டார்மங்கலம் கண்மாய் பகுதியில் உள்ள அய்யனார் கோயில் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரின் திறப்பான்களை திறந்து, கீழே தள்ளி உள்ளே உள்ள தாமிர கம்பிகள் மற்றும் இதர பாகங்களை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு திருடி சென்றனர்.

இது குறித்து கருங்காலக்குடி உதவி மின் பொறியாளர் கொட்டாம்பட்டி போலீசில் நேற்று புகார் அளித்தார். புகாரில் ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள தாமிர கம்பிகள் மற்றும் இதர பாகங்கள் திருடு போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டுள்ளது.

 

 

Tags : Melur ,Ayyanar temple ,Nattarmangalam Kanmai ,Karungalakudi electricity ,Melur… ,
× RELATED பெருங்குடி குப்பை கிடங்கை சீரமைக்க...