×

தேனீ வளர்ப்பு பயிற்சி

ஒட்டன்சத்திரம், பிப். 14: திண்டுக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனரக உழவர் பயிற்சி நிலையம் ஒட்டன்சத்திரம் உழவர் ஆர்வலர் குழு சார்பில் ஒட்டன்சத்திரத்தில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.வேளாண்மை உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் ரமேஷ் தலைமை வகித்து தேனீ வளர்ப்பு முறைகள், அதன் பயன்கள், லாபம் ஈட்டும் முறைகள் குறித்து விளக்கினார்.

தொடர்ந்து கணக்கன்பட்டி ஈஷாக் தேனீ வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்து உரையாற்றினார். இதில் விவசாயிகள், வேளாண்மை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். ஒட்டன்சத்திரம் வட்டார அட்மா திட்ட பணியாளர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.

 

Tags : Ottanchathram ,Dindigul District Joint Directorate of Agriculture Farmers Training Centre ,Ottanchathram Farmers' Activists' Group ,Deputy Director ,Agriculture Farmers Training Centre ,Ramesh ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்