- அங்கன்வாடி மையம் திறப்பு விழா
- திண்டுக்கல்
- அங்கன்வாடி
- கோம்பையன்பட்டி, பெரியகோட்டை ஊராட்சி
- திண்டுக்கல் ஒன்றியம்
- திமுக…
திண்டுக்கல், பிப். 14: திண்டுக்கல் ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சி கோம்பையன்பட்டியில் ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி திறப்பு விழா நடந்தது. அங்கு பயிலும் குழந்தைகள் ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்குகேற்றி வைத்தனர் இந்நிகழ்ச்சியில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் ராஜா, கிளை செயலாளர் அருளானந்து, அவை தலைவர் ஜான் பீட்டர், ஊர் பெரியவர்கள் டேவிட்சன், மரிய பிரான்சிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
