×

கத்தரிக்காய் விதை உருண்டை முறை குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

ஜெயங்கொண்டம், பிப்.14: அரியலூர் மாவட்டம் திருமானூர் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவன கல்லூரியில் பயின்று வரும் இறுதி ஆண்டு மாணவிகள் தில்ஷா, தேஜஸ்வினி, ஞானாம்பிகை, ஹரிணி, தனலெட்சுமி, பவ்மிதா, கௌசல்யா, ஹரிணி, ரா.இளவரசி, தனுஷியா ஆகியோர் கத்தரிக்காய் விதை உருண்டை முறை பற்றி செய்முறை விளக்க நிகழ்ச்சியை நடத்தினர்.

இன்றைய காலகட்டத்தில் விதை வீணாவதைத் தவிர்க்கவும், குறைந்த செலவில் சாகுபடி செய்யவும் விதை பந்து முறை ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. குறிப்பாக, கத்தரிக்காய் போன்ற காய்கறிகளுக்கு இந்த முறை, விவசாயிகளுக்கும் வீட்டுத்தோட்ட ஆர்வலர்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது என்பதை எடுத்துரைத்தனர்.

 

Tags : Jayankondam ,Perambalur Father Rover Agriculture and Rural Development Institute College ,Dilsha ,Tejaswini ,Gnanambika ,Harini ,Thanalekshmi ,Pavmita ,Kausalya ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்