×

அரியலூரில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்

அரியலூர், பிப்.14: அரியலூர் மாவட்டத்தில் அதிமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் ரெட்டிபாளையம், முனியங்குறிச்சி, புத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர், அரியலூர் மத்திய ஒன்றிய செயலாளர் தெய்வ இளையராஜன் தலைமையில் அக்கட்சியில் இருந்து விலகி, மாவட்ட கழக செயலாளரும் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சருமான சா.சி.சிவசங்கர் முன்னிலையில் தங்களை திமுகவில் அதிகாரபூர்வமாக இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணைச் செயலாளர் அருங்கால் சந்திரசேகர், நகர செயலாளர் முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலு, தொகுதி மேற்பார்வையாளர் வளவனூர் அன்பரசன், தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

 

Tags : AIADMK ,DMK ,Ariyalur ,Ariyalur district ,Reddypalayam ,Muniyankurichi ,Puttur ,Ariyalur Central Union ,Deiva Ilaiyarajan… ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்