புதுடெல்லி: உலகக் கோப்பை டி20 20வது போட்டியில் நேற்று, கனடா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய கனடா அணியின் துவக்க வீரர்கள் யுவராஜ் சாம்ரா 5, கேப்டன் தில்பிரீத் பஜ்வா 11 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின் ஆடிய வீரர்களில் நவ்நீத் தலிவால் 34, ஹர்ஷ் தாக்கர் 50 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால், 20 ஓவரில் கனடா 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
எமிரேட்ஸ் தரப்பில் ஜுனைத் சித்திக் 5 விக்கெட் சாய்த்தார். அதையடுத்து களமிறங்கிய எமிரேட்ஸ் அணியின் துவக்க வீரர் ஆர்யன்ஸ் சர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 74 ரன் விளாசினார். அடுத்து ஆடிய வீரர்களில் சொயப் கான் 29 பந்துகளில் 51 ரன் எடுத்தார். 19.4 ஓவரில் எமிரேட்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
