×

ஐபிஎல்லில் இன்று துடிக்கும் இளமை ராஜஸ்தான் துவண்ட அணியாய் குஜராத்

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 9வது போட்டி, அகமதாபாத் நகரில் இன்று இரவு 7.30 மணிக்கு, ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் – சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணிகள் இடையே நடைபெற உள்ளது. குஜராத் அணியில் காகிஸோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா, முகம்மது சிராஜ் ஆகிய 3 நட்சத்திர பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இருப்பினும், இம் மூவரும், இன்றைய போட்டியில் ராஜஸ்தானின் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் முன்பு தங்கள் பந்து வீச்சு திறனை நிரூபிக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது. குஜராத் அணியின் டாப் ஆர்டரில் சுப்மன் கில், ஜாஸ் பட்லர், சாய் சுதர்சன் போன்றோர் இருந்தாலும் பெரியளவில் ஸ்கோர் அமையாதது பின்னடைவு. கடைசியாக ஆடிய பஞ்சாப் உடனான போட்டியில் குஜராத், 162 ரன்கள் மட்டுமே எடுத்து எளிதில் வெற்றியை பறிகொடுத்தது.

ராஜஸ்தான் அணியில் ரியான் பராக், துருவ் ஜுரெல், வைபவ் சூர்யவன்ஷி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா போன்ற நம்பிக்கை நட்சத்திரங்கள் இடம்பெற்று வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தி வருகின்றனர். பந்து வீச்சில், ஜோப்ரா ஆர்ச்சர், நான்ட்ரே பர்கர், ரவி பிஷ்னோய் கலக்கி வருகின்றனர். குஜராத் அணியில் கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன், குமார் குஷாக்ரா, ஜாஸ் பட்லர் இன்றைய போட்டியில் விஸ்வரூபம் எடுக்க முனைப்பு காட்டுவர்.

Tags : Gujarat ,Rajasthan Royals ,IPL ,Ahmedabad ,Ryan Barak ,Gujarat Titans ,Shubman Gill ,Kagiso Rabada ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி..!