- சில்லி பாயிண்ட்…
- திருச்சி போதானா
- இங்கிலாந்து
- லண்டன்
- போதனா சிவானந்தன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- போதனா
- திருச்சி.…
* இங்கிலாந்து செஸ் உலகை கலக்கும் திருச்சி போதனா
லண்டன்: தமிழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி செஸ் வீராங்கனை போதனா சிவானந்தன் (11) இங்கிலாந்து நாட்டின் முதல் நிலை செஸ் வீராங்கனையாக உருவெடுத்து சாதனை படைத்துள்ளார். போதனாவின் தந்தை திருச்சியை சேர்ந்தவர். இவர்களின் குடும்பம், கடந்த 2007ம் ஆண்டு இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தது. தற்போது வடக்கு லண்டனில் துவக்க பள்ளியில் படித்து வரும் போதனா, இங்கிலாந்தை சேர்ந்த 4 முறை மகளிர் பிரிவு செஸ் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற லான் யாவோவை (25) பின்னுக்கு தள்ளி 2366 ஃபிடே ரேட்டிங் புள்ளிகளுடன் இங்கிலாந்தின் முதல் நிலை செஸ் வீராங்கனையாக திகழ்கிறார்.
* பந்தை சேதப்படுத்திய ஜமானுக்கு தடை உறுதி
கராச்சி: ஐபிஎல் போட்டிகளை போன்று பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) தொடரில் லாகூர் குவாலாண்டர்ஸ் அணியின் கேப்டன் ஃபகார் ஜமான், பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரை அடுத்து, இரு போட்டிகளில் அவர் ஆட தடை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து ஃபகார் ஜமான் மேல் முறையீடு செய்தார். அதை, 3 பேர் கொண்ட தொழில் நுட்பக் குழு ஆய்வு செய்தது. அதன் முடிவில், ஃபகார் ஜமானுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என தொழில் நுட்பக்குழு நேற்று அறிவித்தது. எனவே, முல்தான் சுல்தான், இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு எதிரான இரு போட்டிகளில் ஜமான் ஆட முடியாது.
* அபிஷேக் சர்மாவுக்கு 25 சதவீதம் அபராதம்
கொல்கத்தா: கொல்கத்தா ஈடன் கார்டன் திடலில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, 65 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீழ்த்தியது. அப்போட்டியின்போது, ஒரு கட்டத்தில் நடுவரின் முடிவு குறித்து, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி துணை கேப்டன் அபிஷேக் சர்மா அதிருப்தி தெரிவித்தார். இது, ஐபிஎல் விதிகளை மீறும் வகையில் இருந்ததால், அபிஷேக் சர்மாவுக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டி நடுவரின் முடிவை அபிஷேக் சர்மா ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
