×

குழித்துறை அருகே வாலிபர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

நாகர்கோவில், பிப்.14 : குழித்துறை மேற்கு ரயில்வே தண்டவாளத்தில், நேற்று முன் தினம் இரவு புனலூர் – மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது வாலிபர் ஒருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் மேல்புறம் பாகோடு ஊரணிவிளையை சேர்ந்த மணிகண்டன் (36) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டன், மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் நள்ளிரவில் புனலூரில் இருந்து மதுரை சென்ற ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : Nagarko ,Cavity West Railway ,Railways ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்