×

எடப்பாடி சூடு வெச்சும் பயர் ஆகல! கட்சி ஆபீஸ்

 

இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த சில வாரத்துல எலக்சன் தேதிய அறிவிக்க இருக்காங்க. இந்த நேரத்துல அரசியல் கட்சிகள் மும்முரமா என்னமாதிரியான தேர்தல் பணியில ஈடுபட்டு வராங்கன்னு பாக்க ராயப்பேட்டையில இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நாங்க போனோம். ஏன் இங்க போயிருந்தோம்ன்னா, இரண்டு நாளைக்கு முன்னாடி தான் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்துச்சு. இதுல, கட்சி தலைமை எங்களுக்கு ஒத்துழைப்பு தர மாட்டாங்கன்னு மா.செ.வும், நமக்குள்ள இருக்குற மனஸ்தாபத்தை ஓரம் வைச்சிட்டு தேர்தல் பணி செய்யுங்கனு தலைமையும் கேட்டுச்சு. அதனால எடப்பாடி உத்தரவு போட்டதும் தேர்தல் வேலை சூடுபிடிச்சிருக்கும்ன்னு நம்பி போனோம். கொடி, பேனர், அலங்கார நுழைவாயிலோட நம்மல வரவேற்பதா நினச்சோம். ஆனா அது இல்ல. மாவட்ட செயலாளர் கூட்டத்துக்காக வச்ச வாழ மரம் வாடி போயி இருந்தது. அப்பறம் தான் விளங்குச்சி… நேரா வாட்ச்மேன் அண்ணனுக்கு வணக்கத்த வச்சிட்டு, ‘‘உள்ள இன்னைக்கு மீட்டிங் எதனா நடந்துச்சா அண்ணேன்னு’’ நாங்க கேட்க… உடனே அவரு, ‘‘ஆமாப்பா காத்தால நடந்துச்சு மகளிர் அணி சார்புல வளர்மதி மேடம் நடத்துனாங்க…’’ என சொன்னார்.

அவரு சொன்னதும் சரினு சொல்லிட்டு, உள்ள போகும் போது அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம் வெளிய வர அவருக்கும் வணக்கம் சொல்லிட்டு மகளிர் அணி மீட்டிங் பத்தி பேசிட்டு அவரு கிளம்ப நாம அலுவலகம் உள்ள போயி தேர்தல் பணி எதனா நடக்குதானு பாத்தோம். ஒன்னும் பரபரப்பு இல்ல… எடப்பாடி மா.செ.
கூட்டத்துல போட்ட அதிரடி உத்தரவு வீண் என தெரிஞ்சு போன வழியில் நடைய கட்டிட்டு கீழே இறங்கி வந்தோம். அங்க அதிமுக கட்சி கொடி போட்ட டிரஸ் போட்டு ஒரு கட்சிக்காரர் நல்ல நெத்தி நிறைய சந்தனத்தை போட்டு மணக்க…மணக்க… நாற்காலில அமர்ந்து சூடா டீ குடிச்சிட்டே இருக்க… இன்னொரு அதிமுக கர வேட்டி கட்சிக்காரரும் அவரோட டீ குடிச்சிட்டு இருக்க இதுதான் சரியான இடமுன்னு போய் துண்டு விரிச்சோம். அப்போ, அந்த ரெண்டு பேரும் வாயில, மனசுல இருக்குறதெல்லாம் கொட்ட ஆரம்பிச்சாங்க… அதிமுக கொடி டிரஸ் போட்டவரு கரவேட்டி காரர்கிட்ட அண்ணே இந்த சிசிடிவி ஒர்க் ஆவுதா? அப்படின்னு அதிமுக தலைமை அலுவலகத்துல இருக்கற எம்.ஜி.ஆர். மாளிகை மேல வச்சி இருக்க கேமராவ பாத்து கேட்க… கரவேட்டிக்காரர்: நல்ல ஒர்க் ஆவும் பா. செல்லுலயே (மொபைல்) நம்ம என்ன பண்றோம்ன்னு பாப்பாங்க.

அதிமுக கொடி டிரஸ்காரர்: அப்படியா அண்ணே. இது இவ்வளவு நாளா எனக்கு தெரியாம போச்சி அண்ணே. நான் டிவில மட்டும் தான் பாக்க முடியும்ன்னு நெனச்சிட்டு இருந்தேன். அப்போ தலைவரும் (எடப்பாடி
பழனிசாமி) பாப்பாரா?. கரவேட்டிக்காரர்: அட நம்ம தலைவர் கண்டிப்பா பாத்துட்டு தாம்பா இருப்பாரு. மறுபடியும் இந்த ஓபிஎஸ் ஆள கூட்டிவந்து ஆபீஸ உடைச்ச அப்புறம் என்ன பண்றது? இப்படி பாத்துதான் யாரு யாரு வரா போறான்னு தெரிஞ்சிக்கலாம்ல. அதிமுக கொடி டிரஸ்காரர்: அண்ணே நம்ம ஆபீஸ் ரொம்ப சின்னதா இருக்குன்னே, திமுகவ பாருங்க எவ்வளோ பெரிய ஆபீஸ் வச்சி இருக்காங்க. கரவேட்டிக்காரர்: நம்ம அம்மா இருக்கும் போது எல்லாம் வாங்கி இருக்கலாம் என்ன பண்றது. எங்க வாங்கி வச்சதையே சசிகலா
தூக்கிட்டு போய்ட்டாங்களே. அதிமுக கொடி டிரஸ்காரர்: சசிகலா கிட்ட இருந்தே பிஜேபி தூக்கிட்டானேண்ணே.
கரவேட்டிக்காரர் : அட இதுல இந்த தீபா வேற எங்க அத்தை சொத்து எனக்கு சொந்தம்னு போயஸ் கார்டன வாங்கிடுச்சு.

அதிமுக கொடி டிரஸ்காரர்: என்னவோ, போங்கண்ணே. இந்த முறை கண்டிப்பா நாம ஜெயிப்போம். பாருங்க. உடனே இடைல நாம புகுந்து நீங்க எந்த ஊரு அண்ணா. நாம கேட்க அதிமுக கொடி டிரஸ் போட்டவரு நான் நாமக்கல் பா. மெயின்லயே இருக்கேன்னு அவரு சொல்ல, மெல்ல நாம அவரு கிட்ட பேச ஆரம்பிச்சோம். நாமக்கல்ல அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்குண்ணே? அடப்போப்பா ‘‘அண்ணா நின்னா தம்பி தோற்கணும்னு நினைக்குறானுங்க… தம்பி நின்னா அண்ணா தோற்கனும்னு நினைக்குறானுங்க… இதுல எங்க ஜெயிக்குறது. அதான் அங்கே நாங்க ஓட்டுக்கு ஆயிரம் தர முடிவு செஞ்சி இருக்கோம். என்ன நடக்குதோ பொறுத்து இருந்து தான் பாக்கணும்ன்னு அதிமுக கொடி டிரஸ் போட்டவரு சொல்ல நாமலும் எல்லாம் கேட்டுட்டு சரி அண்ணே சொல்லிட்டு அவங்க டீ குடிச்சி முடிச்ச கிளாச கீழ வைக்குறதுக்குள்ள நாம அங்க இருந்து நடைய கட்டிட்டோம். அடுத்த வாரம் வேற ஆபீஸ் போவோம்.

 

Tags : Edappadi ,Election Commission of India ,AIADMK ,Royapettah ,
× RELATED பதின் பருவ காதலால் பாதிக்கப்படும்...