×

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவுத்திட்டம் துவக்கம்

 

பந்தலூர்,பிப்.10: நெல்லியாளம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவுத்திட்டம் துவக்க விழா நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து நெல்லியாளம் நகராட்சி சார்பில் பந்தலூர் தனியார் மண்டபத்தில் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு நெல்லியாளம் நகர்மன்ற தலைவர் சிவகாமி தலைமை வகித்தார்.

ஆணையாளர் சத்திவேல் வரவேற்று பேசினார். நிகழ்வில், முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி, நெல்லியாளம் நகர செயலாளர் சேகரன், பந்தலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஷ், கவுன்சிலர்கள் ஆலன்,முரளிதரன்,பன்னீர்செல்வம்,சீலா,நாகராஜ்,வசந்தகுமாரி,எல்பிஎப் துணை பொதுச்செயலாளர் மாடசாமி மற்றும் நகராட்சி பொறியாளர் விஜயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pandalur ,Nellialam Municipality ,Chief Minister ,M.K. Stalin ,Tamil Nadu ,Nellialam Municipality… ,
× RELATED ஊட்டியில் கவுரவ விரிவுரையாளர்கள் 2வது...