×

குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் ரகளை செய்தவர் கைது

மார்த்தாண்டம்,பிப்.13 : குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் மது போதையில் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டியபடி ஒருவர் சுற்றி திரிந்துள்ளார். இதை பார்த்த மகளிர் விரைவு நீதிமன்ற பெஞ்ச் கிளார்க் இது குறித்து களியக்காவிளை போலீசாரிடம் புகாரளித்தார். அதன் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது, அவர் மேலக்குன்னவிளை பகுதியை சேர்ந்த கொத்தனார் வேலை செய்து வரும் விஜய குமார் என்பதும், நிலுவையில் உள்ள வழக்கில் ஆஜராகாமல் மது போதையில் நீதிமன்ற வளாகத்தில் சுற்றி திரிந்ததும் தெரிந்தது. பின்னர் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்தனர்.

Tags : Cavalieri courthouse ,MARTHAM ,CAVERNUM ,COURTHOUSE ,Women's Rapid Court ,Bench ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்