×

எரிவாயு பைப் லைனில் திடீரென தீப்பிடித்தால் அணைப்பது எப்படி: தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்க பயிற்சி

திருப்புவனம்: திருப்புவனம் அருகே எரிவாயு குழாய், பெட்ரோல் டேங்கரில் கசிவு, தீ விபத்து ஏற்பட்டால் தடுக்கும் வழிமுறை குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில் சென்னை எண்ணூரில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு சுமார் 534 கி.மீ. தொலைவுக்கு இயற்கை வாயு குழாய் (பைப்-லைன்) அமைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே செல்லப்பனேந்தல், பிரமனூர் வழியாக இந்த பைப் லைன் செல்கிறது.

இதில் திடீரென வாயு கசிவு, தீ விபத்து ஏற்பட்டால் அதை தடுக்கும் வழிமுறை குறித்தும், முறைப்படி தகவல் தெரிவிப்பது குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல் விளக்க பயிற்சி மற்றும் பேரிடர் மேலாண்மை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்தியன் ஆயில் நிறுவன மதுரை மண்டல மேலாளர் முருகேசன், மேலாளர் சுந்தர், திருப்புவனம் தாசில்தார் ஆனந்த பூபாலன் ஆகியோர் முன்னிலையில் இந்த பயிற்சி நடைபெற்றது. இதில் மானாமதுரை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் அவசர கால விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி காட்டினர்.

எரிவாயு குழாய், பெட்ரோல் டேங்கரில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டால் தடுக்கும் வழிமுறை, மீட்பு பணி உள்ளிட்டவை தொடர்பாக செயல் விளக்கம் அளித்தனர். பொதுமக்கள் பலர் பார்வையிட்டனர்.

Tags : Thiruppuvanam ,Indian Oil Corporation ,Chennai Ennore ,Thoothukudi ,
× RELATED இணையவழி வர்த்தகத்தில் ஓசூர் தாஜ்மஹால் ரோஜாவிற்கு மவுசு