உலக மக்களின் வாழ்க்கையில், ஏற்படும் சுக – துக்கங்களுக்குக் காரணம் நவகிரகங்களின் சுழற்சிகளே காரணமாகும். இவற்றிலும், மிக முக்கியமானவை குரு, சனி, ராகு மற்றும் கேது ஆகியவற்றின் இடமாற்றங்களே மக்களால் கவலையுடன் கவனிக்கப்படுபவைகளாகும்.இதற்குக் காரணம், மனிதப் பிறவி எடுத்தவரின் உடல்நலன், மன நலன், பொருளாதாரம், குடும்ப நலன் ஆகியவற்றை நேரடியாக, பெருமளவிலும் பாதிக்கப்படுவதற்கு இந்த நான்கு கிரக நிலைகளின் சஞ்சார நிலைகளைப் பொறுத்தே அமைவது காரணமாகும்.இவற்றிலும், சனி, ராகு, கேது ஆகியவற்றின் சஞ்சார நிலைகளினால் ஏற்படும் பாதிப்பு, கடினமாக இருப்பதும், மற்றொரு முக்கிய காரணமாகும். ஆதலால்தான், மக்களும் குரு, சனி, ராகு – கேது ஆகிய நான்கு கிரகங்களின் சஞ்சார நிலைகளில் ஏற்படும் மாறுதல்களைக் கவலையுடன் எதிர்பார்க்கின்றனர்!
எந்தக் கிரக நிலை மாறுதல்களானாலும், அவற்றிற்கேற்ப, சக்திவாய்ந்த பரிகாரங்களையும், நமது வேதகால மகரிஷிகள் கடினமான தவங்களின்மூலம், கண்டறிந்து, நமக்கு பரம கருணையுடன் அருளியுள்ளனர்.நவகிரகங்களின் சஞ்சார நிலைகளினால், ஏற்படும் தோஷங்களில், சனி, செவ்வாய், ராகு ஆகிய மூவராலும் ஏற்படும் தோஷங்கள் சற்று கடினமானவை.வேதகால மகரிஷிகளினால், அருளப்பட்ட நவகிரக தோஷ நிவர்த்தி நூல்களில் மிகப் புராதனமானது “நவகிரக தோஷ பரிகார ரத்தினம்” என்ற நூலாகும்!இந்நூல், எவரால், எப்போது, எவருக்கு உபதேசிக்கப்பட்டது என்பது பற்றி ஆதாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை!வசிஷ்டர் எனும் மகரிஷியால் உபதேசிக்கப்பட்டது இந்நூல் என பெரியோர்கள் கூறுகிறார்கள். இதே போன்று, ஜோதிடப் பரிகார நூல்கள் பிற்காலத்தில் பல வல்லுநர்களால் எழுதப்பட்டவைகளாகும்.
இருப்பினும், பெரியோர்களின் உபதேசங்கள் மற்றும் பலரது அனுபவங்கள், மிகப்புராதன பரிகார நூல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, பல பரிகாரங்கள் இக்கட்டுரையில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இவற்றால் எமது “தினகரன்” வாசக அன்பர்கள் பயன் பெற்றால் மகிழ்ச்சியடைவோம்.மிகக் கடினமான தவத்தினாலும், பக்தியினாலும் மட்டுமே உயர்ந்த அவதாரப் புருஷர்கள், மகரிஷிகள், முனி சிரேஷ்டர்கள் ஆகியோரின் உபதேசங்களினால், சக்தியும் பெருமையும் பெற்ற இப்பரிகாரங்களினால், எமது வாசக அன்பர்கள் பயன்பெற்றால், அதைவிட சிறந்த பரிசு வேறெதுவும் எமக்கில்லை.பெற்ற தாயின் பேரன்பைவிட, உயர்ந்தது நமது வேதகால மகரிஷிகள் நம்மீது கொண்டு்ள்ள கருணையும், பேரன்பும். என்றோ இப்பாரதப் புண்ணிய பூமியில் பிறக்கவுள்ள எதிர்காலச் சந்ததியினரைப்பற்றி, பரம கருணையுடன் நமக்கு அருளியுள்ள அவர்களது ஜோதிட உபதேசங்களைக் கடைப்பிடித்து, பிறவியெனும் பெருங்கடலைக் கடந்து இன்புறுவோமாக இறைவனின் ஈடிணையற்றனால்!இனி 9 ராசியினருக்கும் அடுத்துவரும் சுமார், ஒருவருடக் காலத்திற்கு நிகழவுள்ள நன்மைகளையும் பிரச்னைகளையும், தீர ஆராய்ந்து பார்ப்போம்.
எந்தெந்த சமயத்தில், எத்தகைய அம்சங்களில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கையாக செய்ய வேண்டிய பரிகாரங்கள் ஆகியவற்றையும் எமது வாசக அன்பர்களுக்காக தீர ஆராய்ந்து, கூறியிருக்கின்றோம்.இப்பரிகாரங்கள் அனைத்தும் வேத கால மகரிஷிகளால் அருளப்பட்டவைகளாகும். அவற்றால், ஏற்படும் பரிகார நிவர்த்தியும், உடனுக்குடன் கிடைக்கும்.இதற்குக் காரணம், இப்பரிகாரங்கள் அனைத்தும் மிகக் கடினமான தவத்தின் பயனால் அம்மகரிஷிகளுக்கு, கிடைத்த அரிய பொக்கிஷங்களாகும்.நம் பாரதப் புண்ணியப் பூமியை ஆண்ட மாமன்னர்களின் அரசாங்கம் ஒவ்வொன்றிலும், திறமையும், நேர்மையும், தூய்மையும் கொண்ட பெரியோர் ஒருவர் ஜோதிட மந்திரியாக பதவியேற்று, ஆலோசனை கூறிவந்ததை விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஜோதிட மந்திரியாக விளங்கிய, அல்லசானி பெத்தன்னா” வின் தேச பக்தி, ெதய்வ பக்தி, ஜோதிடப் புலமைஆகியவை பற்றி, பிரசித்திப் பெற்ற சரித்திர நூல்கள் போற்றிப் புகழ்ந்துள்ளன.மாசி மாதத்தில், நிகழவிருக்கும் மகத்தான புண்ணிய நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்வோம்….!
மாசி மாதத்தின் இணையற்ற தெய்வீகப் பெருமைகள்…!'”எவனொருவன், மரணத் தருவாயில் காசி திருத்தலத்தையும், அங்கு எழுந்தருளியுள்ள காசி விசுவநாதப் பெருமானையும், அன்னபூரணி அம்பிகையையும், புண்ணிய நதியான கங்கா நதியையும், மனத்தில் நினைக்கின்றானோ அவன், தனது ஜீவித காலத்தில் செய்துள்ள அனைத்து பாபங்களும் அந்த விநாடியே தீயினிற் தூசாகிவிடும் எனவும், அதன் காரணமாக, அந்த ஜீவன் புண்ணிய உலகங்களுக்குச் சென்றுவிடுகிறது என கூறுகிறது, “காசி புராணம்”, “கருட புராணம்” போன்ற சூட்சும புராணங்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன.அத்தகைய புண்ணியம் செய்துள்ள ஜீவன்கள் இந்த சரீரத்தை விட்ட பிறகு, புண்ணிய உலகங்களுக்குச் சென்றுவிடுவதாகவும் அந்நூல்கள் விவரித்துள்ளன.மிகப் பழமையான இந்நூல்கள், காசித் திருத்தலத்தின் புராதன, தெய்வீகப் பெருமைகளை விவரித்துள்ளது.ஒரு ஜீவனுக்கு மரணம் சம்பவிக்கும்போது, அந்த ஜீவனுக்கு மரண வேதனை ஏற்படாமலிருப்பதற்காக திருக்கயிலை ஸ்ரீசிவபெருமானே அந்த ஜீவனை, தனது மடியிலிருத்தி, அதன் காதுகளில் “ஸ்ரீராம், ஸ்ரீராம்” எனும் திவ்ய மகா மந்திரத்தை அதன் காதுகளில் உபதேசிப்பதாக, “காசி புராணம்” எனும் புராதன நூலும் கூறுகின்றன.
காசியில் இறப்போருக்கு, மரண அவஸ்த்தையும், இறந்தபிறகு நரக வேதனையும் கிடையாது எனவும் கூறுகிறது, அந்நூல்!ஸ்ரீராமபிரானின் மூதாதையரான ஹரிச்சந்திர மாமன்னன், சனி பகவானின் பல சோதனைகளுக்கு ஆளாகி, துன்புற்ற நகரமும் இந்தக் காசி மாநகரம்தான்!மும்மூர்த்திகளான, பிரும்மா, விஷ்ணு மற்றும் சிவபெருமான் ஆகிய மூவரும் தரிசனமளித்த திருத்தலமும் இந்த வாரணாசிதான்!!வருணை, அசி, கங்கை ஆகிய மூன்று தெய்வீக நதிகளும் சங்கமமாவதால், காசி திருத்தலத்திற்கு வாரணாசி, காசி என்ற பெயர்கள் ஏற்பட்டன. “இந்தியாவைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், காசியைத் தெரிந்து கொள்ளுங்கள்…!” எனக் கூறினார், ஆங்கில சரித்திரப் பேராசிரியர் ஒருவர்!தற்போதுள்ள ஸ்ரீவிசுவநாதப் பெருமான் அன்னபூரணி திருக்கோயில், மகாராணி அகல்யாபாய் ேஹால்கார் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது.காசி திருத்தலத்தில், நவகிரகங்களும், சப்த (ஏழு) ரிஷிகளும் ஸ்ரீவிசுவநாதப் பெருமானையும், அன்னபூரணி அம்பிகையையும், தினமும் பூஜித்துவருவதாக தலபுராணம் கூறுகிறது.நவகிரகங்களினால், எத்தகைய தோஷங்கள் ஏற்படினும், காசி திருத்தலத்தில் கங்கையில் நீராடி, ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீவிசுவநாதப் பெருமானைப் பூஜிப்பதால், விலகிவிடும் எனக் கூறுகின்றன, புராதன ஜோதிட நூல்கள்!நவகிரகங்களில் ஒருவரான சனி பகவானுக்கு ஏற்பட்ட தோஷம் அவர் கேதார்காட் எனும் ஸ்நானகட்டத்தில், தவமியற்றியதால், அத்தோஷம் விலகியது. ஆகையால், சனி பகவானால் ஏற்படும் எத்தகைய கடுமையான நவகிரகங்களின் தோஷத்திற்கும் கங்கா ஸ்நானமும், காசி திருத்தல தரிசனமும் உடனுக்குடன் பலனளிப்பவைகளாகும்.
மாசி மாதத்தின் விசேஷ புண்ணிய தினங்கள்!
மாசி 1 (13-2-2026)வெள்ளிக்கிழமை- சர்வ ஏகாதசி.
மாசி 2 (14-2-2026) சனிக்கிழமை – சனி மகா பிரதோஷம் – மாலையில், சனி பகவான் தரிசனம் அவசியம்.
மாசி 3 (15-2-2026) ஞாயிற்றுக்கிழமை – மகா சிவராத்திரி – இன்று விரதமிருந்து, இரவு முழுவதும் விழித்திருந்து, நான்கு ஜாமங்களிலும் ஸ்ரீசிவபெருமானைப் பூஜிப்பதால், கொடிய பாபங்களும் உடனுக்குடன் விலகிவிடும். அதுமட்டுமல்லாது, அனைத்து சுகங்களையும் அனுபவித்த பிறகு, கைலாச பிராப்தி சித்திக்கும் பேறு கிடைக்கும்.
மாசி 4 (16-2-2026) திங்கட்்கிழமை – போதாயன அமாவாசை மற்றும் திருவோண விரதம். மேலும், இன்று திருக்கச்சி நம்பிகள், பாஷ்யகாரர், திலைமலையாண்டார், கந்தாடையாண்டாரின் திருநட்சத்திரம்.
மாசி 5 (17-2-2026) செவ்வாய்க்கிழமை – சர்வ அமாவாசை. தந்தை இல்லாதவர்கள், குதப காலம் அல்லது பித்ருக்காலம் எனப்படும் மதியம் 1.15 முதல், 3.30 மணிக்குள் அவரவர் குல வழக்கப்படி . த ிதி தர்ப்பணம் படையல் கொடுத்து கன்றுடன்கூடிய பசுவிற்கு அகத்திக்கீரை, கொடுத்த பிறகே இவ்விரதத்தை முடித்திடல் வேண்டும். இந்நன்னாளில், வெங்காயம், பூண்டு, கத்தரிக்காய், முருங்கைக்காய் போன்ற காய்கறிகளைத் தவிர்த்தும், பருப்பு வகைகளில் பயத்தம் பருப்பை மட்டுமே சமையலில் பயன்படுத்தவேண்டும். இதர பருப்பு வகைகள் சேர்க்கக்கூடாது.இந்த மௌனி அமாவாசையன்று, மௌன விரதத்தைக் கடைப்பிடிப்பது சாலச் சிறந்தது. அவ்வாறு கடைப்பிடிக்கும்பட்சத்தில், வாக்கினால் செய்த பாபங்கள் அனைத்தும் விலகிடும். இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பவர்களின் சந்ததியினர் வைய்யத்துள் வாழ்வாங்கு வாழ்வர்.
மாசி 06 (18-2-2026) புதன்கிழமை – இந்நன்னாளில் சந்திர தரிசனம் செய்ய வேண்டும் என நவகிரக புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, வளர்பிறை முதல்நாளில் சந்திரன் தோன்றுவதால், இந்நாளில் மாலை நேரத்தில்சூரியன் மறையும்போது சந்திரனின் உதயத்தை மேற்குக் கீழ்வானில் தரிசனம் செய்யும் பேறு பெற்றவர்களுக்கு இந்நாள் முதற்கொண்டு, மாதம் முடிவடையும் வரையிலும் வாழ்வில் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மேலும், ஆயிரம் பிறைகளைக் காணும் (அதாவது, சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் காணும்) மகத்தான பேற்றையும் பெற்று வைய்யத்துள் வாழ்வாங்கு வாழ்வீர்கள் என்பது திண்ணம்.
மாசி 08 (20-2-2026) வெள்ளிக்கிழமை- பிள்ளை உறங்காவல்லி தாசரின் திருநட்சத்திரம்.
மாசி 09 (21-2-2026) சனிக்கிழமை – சதுர்த்தி விரதம். உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருப்பவர்கள் இவ்விரதத்தைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். இன்றைய தினத்தில் உபவாசமிருந்து, மாக்கோலமிட்டு, ஸ்ரீவிநாயகப் பெருமானை எழுந்தருளச் செய்து, அறுகம் புற்களால் அர்ச்சனை செய்வித்து, இரண்டு தேங்காய் மற்றும் 18 கொழுக்கட்டைகளை நைவேத்தியம் செய்துவிட்டு, ஒரு பிரம்மச்சாரிக்கு அன்னமளித்து, உங்களால் முடிந்த தட்சிணை கொடுத்து வணங்கவேண்டும். இவ்விதம் தொடர்ந்து செய்துவருபவர்களுக்கு காரிய சித்தி உண்டாகும். மணக்கால் நம்பிகளின் திருநட்சத்திரம்.
மாசி 10 (22-2-2026) ஞாயிற்றுக்கிழமை- சஷ்டி விரதம். “சட்டியில் இருந்தால்தானே அகப்பையில்….?” என்பது மூதோர் வாக்கு. பவிஷ்ய புராணத்தில், சஷ்டி விரதத்தைப் பற்றி சிலாகித்துக் கூறப்பட்டுள்ளது. இவ்விரதத்தைக் கடைப்பிடிப்பார்க்கு, எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் வெற்றிமாலை சூடுவர். புத்தி, பலம், அசாத்தியமான மனோதைர்யம் மட்டுமல்லாது, ரோகமில்லாத நீண்ட – ஆயுளைப் பெற்று அனைத்துவித பேறுகளையும் பெற்று, அனைத்து மக்களுக்கும் உதவிகரமாகவும், எவ்விதத் தீங்கும் எந்த ஒரு ஜீவராசிக்கும் செய்யாமலிருப்பர். மேலும், இன்று திருவள்ளுவ நாயனார் திருநட்சத்திரம்.
மாசி 11 (23-2-2026) திங்கட்கிழமை – கிருத்திகை விரதம். பவிஷ்ய புராணத்தில், கிருத்திகை விரதத்தைப் பற்றி வானளாவப் புகழ்ந்திருக்கின்றது. எவ்வாறு கார்த்திகைப் பெண்கள் ஸ்ரீமுருகப் பெருமானை சீராட்டி, தாலாட்டி, பாலூட்டி வளர்த்தனரோ அதே போன்று நம் சந்ததியினரையும், அழகுடனும், அறிவுத் திறனுடனும் கூடிய சத்-புத்திரர்களையும் தந்தருள்வார்கள்.
மாசி 12 (24-2-2026) செவ்வாய்க்கிழமை – எறிபத்தர் திருநட்சத்திரம்.
மாசி 15 (27-2-2026) வெள்ளிக்கிழமை – ஏகாதசி விரதம். இவ்விரதத்தைப் பற்றி கூறாத புராணங்களே இல்லை எனச் சொல்லலாம். அப்பேற்பட்ட புண்ணிய பலன்களை அள்ளித் தரக்கூடியது ஆமலிகா ஏகாதசி. மேலும், இன்றைய நன்னாள், ஸ்ரீகுலசேகராழ்வாரின் திருநட்சத்திரம்.
மாசி 17 (1-3-2026) ஞாயிற்றுக்கிழமை – பிரதோஷம் – ஞாயிறன்று பிரதோஷம் ஏற்படுவதால், இன்றைய தினத்தில் பகலில் உபவாசமிருந்து, பிரதோஷகாலமாகிய மாலை 4.30 முதல், 6.30க்குள்ளாக சாம்ப சிவமூர்த்தியை ரிஷபாரூடராக வணங்கினால், ரோகம் விலகும். நீண்ட ஆயுள் கிட்டும். மருத்துவரை கனவிலும்கூட நினைக்காமல் – அவரை அணுகாமலிருக்க வழிவகை செய்திடுவார், அந்தப் பரம்பொருள்!
மாசி 18 (2-3-2026) திங்கட்கிழமை – மாசி மகம், ஸ்ரீநடராஜப் ெபருமான அபிஷேகம், காம தகனம்.ஸ்ரீலட்சுமி நரசிம்ம ஸ்வாமி அவதரித்த வளர்பிறை சதுர்த்தசி. இன்றைய தினத்தில், பூஜையறையில் அரிசி மாக் கோலமிட்டு, ஸ்ரீலட்சுமி நரசிம்ம ஸ்வாமியின் திருவுருவப் படத்தை எழுந்தருளச் செய்வித்து, துளசி தளங்கொண்டு பூஜித்து, சுக்கு, வெல்லம், ஏலக்காய் சேர்த்த பானகத்தை அமுது செய்வித்து, அந்தப் பானகத்தை அருகிலுள்ள திருக்கோயிலுக்குச் சென்று பக்தர்களுக்கு விநியோகம் செய்வித்தால், உங்கள் உள்மனத்திலுள்ள சகலவித அபிலாஷைகளும் ஈடேறப் போவது திண்ணம். மேலும், இன்று பௌர்ணமி விரதம். இன்றைய நன்னாளில் நிர்ஜலமாக (காலையிலிருந்து இரவுவரை நீரைக் கூட அருந்தாமல் இருப்பது) உபவாசமிருந்து ஸ்ரீசத்தியநாராயணப் பெருமானைத் துதித்தால், சகலவித அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தந்தருள்வதாக சத்தியப்ரமாணம் செய்ததினாலேயே அந்தப் பரம்பொருளுக்கு, “சத்திய நாராயணன்” என்ற காரணப் பெயராயிற்று. ஏதும் இயலாவிடினும், அவருடைய திருநாமத்தை உச்சரித்து ஸ்ரீஆண்டாள் பிராட்டி உரைத்தபடி, “வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்தோமேயானால்” நம் பாபங்கள் விலகி, அனைத்து சம்பத்துக்களும் நம்ைம வந்தடைவது உறுதி.
மாசி 20 (4-3-2026) புதன்கிழமை பூர நட்சத்திரத்தில் அவதரித்தவரும், புலஸ்திய மாமுனிவரின் சீடரும், அட்டமா சித்துக்களையும் தன்னகத்தே கொண்டுள்ள போகரின் பிரதான சித்த மகா புருஷர் இராமத் தேவரின் திருநட்சத்திரம். இந்த சித்த மாமுனியின் ஜீவ சமாதியில் (மதுரை கள்ளழகர் மலையில் உள்ளது.) இன்றளவும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
மாசி 22 (6-3-2026) வெள்ளிக்கிழமை – சனிப் பெயர்ச்சி. சனி பகவான், கும்ப ராசியிலிருந்து, மீன ராசிக்கு இடம் பெயர்கிறார்.
மாசி 23 (7-3-2026) சனிக்கிழமை – சங்கட ஹரசதுர்த்தி. மேலும், இன்றுகோட்செங்கட்சோழர் திருநட்சத்திரம்.
மாசி 24 (8-3-2026) ஞாயிற்றுக்கிழமை – ஸ்ரீலட்சுமி நரசிம்ம ஸ்வாமி அவதரித்த ஸ்வாதி திருநட்சத்திரம். ஸ்ரீலட்சுமி நரசிம்ம ஸ்வாமிக்கு, துளசி தளம் கொண்டு அர்ச்சித்து, கடுகு – கறிவேப்பிலை தாளித்த புளிக்காத தயிர் சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், சகல ஐஸ்வர்யங்களும் உங்களை வந்தடையும்.
மாசி 27 (11-3-2026) புதன்கிழமை – திரியம்பகாஷ்டமி – இந்நன்னாள் காலையில் ஸ்ரீசிவபெருமானையும், சூரிய அந்திமக் காலத்தில் காலபைரவரையும் தரிசனம் செய்து வழிபட்டால், அநாவசியமான பயம் விலகும். முக்கியமாக யமபயம் விலகிடும். ஆயுள் அபிவிருத்தியடையும். மேலும் திருமணத் தடைகள் விலகி, நன்மணமக்கள் வாய்க்கப்பெறுவர். மேலும், இன்றைய தினம் சித்த மகாபுருஷர் அறிவானந்தரின் திருவவதாரப் புண்ணிய தினம்.
மாசி 28 (12-3-2026) வியாழக்கிழமை- சிறிய கோவிந்தப் பெருமான் திருநட்சத்திரம்.
மாசி 30 (14-3-2026) சனிக்கிழமை- காரடையான் நோன்பு. முன்பொரு காலத்தில், அஸ்வபதி நாட்டின் இளவரசி சாவித்திரி, அற்ப ஆயுளையுடைய சத்தியவானைத் திருமணம் செய்துகொண்டாள்.
ஒருசமயம், தன் கணவனின் உயிரைக் கவர்ந்து செல்ல யமதர்ம ராஜனின் வருகையைக் கண்ட அந்தப் பத்தினித் தெய்வம், தானியங்களைக் கொண்டு, கொழுக்கட்டைகளைத் தயாரித்து, மஞ்சள் சரடு கட்டிக்கொண்டு, யமதர்ம ராஜனிடமிருந்து தன் கண்கண்ட தெய்வம் சத்தியவானை மீட்டாள். இந்நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில், சுமங்கலிப் பெண்கள், மாசி மாதக் கடைசியில் மாங்கல்ய பலத்திற்காக நித்திய சுமங்கலிப் பேறிற்காக இந்நோன்பு நோற்பார்கள். நோன்பு மற்றும் மஞ்சள் சரடு கட்டிக்கொள்ள வேண்டிய நேரம் மாலை 6.30லிருந்து இரவு 8.30க்குள்ளாகும். இந்நோன்பினைக் கைக்கொண்ட பெண்மணிகள் தீர்க்க சுமங்கலிகளாக நலமுடன் வாழ்வர்.
பூரண சந்திர கிரகணம்!
03-03-2026 அன்று செவ்வாய்க்கிழமை, சுக்கில பட்சம் பௌர்ணமி திதி, பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, கடக லக்னத்தில் பூரண சந்திர கிரகணம் நிகழ்கிறது.
கிரகண ஆரம்பக் காலம்: பிற்பகல் 03.20
கிரகண மத்தியமம் : மாலை 05.04
கிரகண முடிவு : இரவு 07.54.
பூரம், பரணி, பூராடம், மகம் இந்த நட்சத்திரங்களிலும், செவ்வாய்க் கிழமைகளில் பிறந்தவர்களும் கட்டாயமாக சாந்தி (பரிகாரம்) செய்து கொள்ள வேண்டும். அன்று காலை 09.00 மணிக்குப் பிறகு எதுவும் சாப்பிடக்கூடாது. கிரகணம் விட்ட பிறகு, குளித்தபின், சாப்பிடலாம்.
விசேஷ குறிப்பு: வயோதிகர்கள், நிரந்தர நோயுற்றோர், சிறு குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்கு விதிவிலக்கு உண்டு.
சந்திர கிரகணத்தினால் ஏற்படும் தோஷ நட்சத்திரர்கள் மட்டுமல்லாது, ஏனைய-மற்றோரும் கீழ்க்காணும் சந்திர கிரகண ஸ்துதியை ஒன்பது அல்லது 18 முறைகள் சொன்னால், சகலவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.
“இந்த்ரோ அநலோ யமோ ரி ேக்ஷா வருணோ வாயு ரேவச குபரே ஈசோக்நந்து இந்து உபராக உத்தவ்யதாம் மம றீறீ”
இந்தச் சந்திர கிரகணத்தினால், வரும் மாதங்களில், காடு-மலைகளில் முக்கியமாக வடக்கு-திக்கில் நல்ல மழை பொழிவு இருக்கும். பல இடங்களில் நில அதிர்வுகளும் இருக்கும்! அதுமட்டுமல்லாது, செல்வந்தர்களுக்கு, தொழில் மற்றும் பங்குச் சந்தையில் பண-இழப்பும் எற்படும் ராஜிய பரிபாலனம் செய்யும் அரசாங்கத்தினால், பொதுமக்களுக்கு நல்ல பல திட்டங்களும் செயல்படுத்தப்படும். அதனால் மக்கள் இன்புறுவர்.
