×

மணிப்பூரில் வன்முறை அதிகரிப்பு: ராணுவ வீரர்கள் மீது மக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

இம்பால்: மணிப்பூரில் வன்முறையின் போது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்களை ராணுவத்தினர் வேடிக்கை பார்த்ததாக அம்மாநில மக்கள் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளனர். மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி திரும்ப பெறப்பட்டு பாஜக தலைமையில் புதிய ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாஜக ஆட்சி அமைந்த சில நாட்களையே குக்கி – மெய்த்தி பிரிவினர் இடையே மீண்டும் மோதல் அதிகரித்து வருகிறது. உக்ருல் உள்ள லிட்டன் சரேய்கோங் கிராமத்தின் குக்கி – மெய்த்தின் இடையே மோதல் ஏற்பட்டு 10 வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

அப்போது மோதலை தடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் பதற்றம் அதிகரிக்காமல் தடுக்கும் வகையில் உக்ருல் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மணிப்பூரில் வன்முறைகள் தொடர்வதால் மேலும் 2 மாவட்டங்களில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. வன்முறை மற்ற மாவட்டங்களுக்கு பரவும் சூழல் நிலவியதால் இணையதள சேவையை முடக்க மணிப்பூர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் வன்முறையின் போது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்களை தடுக்காமல் ராணுவத்தினர் வேடிக்கை பார்த்ததாக பொது மக்கள் குற்றம் சட்டியுள்ளன. பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தினரின் வேலை இதுதானா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags : Manipur ,Imphal ,President of the Republic ,BJP ,
× RELATED டெல்லியில் 500 புதிய மின்சார...