டெல்லி : டெல்லியில் 500 மின்சார பேருந்துகளின் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பெரும்பாலான பேருந்துகள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பேருந்துகள் என்பது அம்பலம் ஆகி உள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் டெல்லியில் கடந்த வாரம் 500 புதிய மின்சார பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார். இந்த நிலையில், இந்த பேருந்துகளில் பெரும்பாலானவை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பேருந்துகள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இதனை அந்த பேருந்துகளின் ஓட்டுநர்களே வீடியோ மூலம் அம்பலப்படுத்தியுள்ளனர். அதில் இந்த பேருந்துகள் அனைத்தும் டெல்லி சாலையில் ஏற்கனவே ஓடி கொண்டிருந்தவை என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பாஜக முதலமைச்சர் ரேகா குப்தாவின் முகத்திரை கிழித்தெரியப்பட்டுள்ளது. பழைய பேருந்துகளை புதிய பேருந்துகள் போல் சித்தரித்து விழா எடுப்பதா என பல்வேறு தரப்பினரும் டெல்லி பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது ஒரு மாபெரும் ஏமாற்றுவிலை என்று அரசியல் கட்சிகளும் விமர்சித்துள்ளனர்.
