×

பிரான்ஸ் அதிபர் வருகைக்கு முன் 114 ரபேல் விமானங்கள் வாங்க இந்தியா ஒப்பந்தம்: ஓரிரு நாளில் கையெழுத்து

 

புதுடெல்லி: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வரும் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வர உள்ளார். டெல்லி வரும் மேக்ரான், ஏஐ தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்று, பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அவரது வருகைக்கு முன்பாக, பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து இந்தியா 114 ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தை பாதுகாப்பு அமைச்சகம் இந்த வாரமே இறுதி செய்ய திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்தியா பிரான்சிடம் இருந்த 36 ரபேல் போர் விமானங்களை வாங்கி விமானப்படையில் சேர்த்துள்ளது. அதைத் தொடர்ந்து ரூ.63 ஆயிரம் கோடில் கடற்படைக்கான 26 ரபேல் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இந்த வரிசையில் தற்போது ரூ.3.25 லட்சம் கோடி மதிப்பில் 114 ரபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

Tags : India ,President ,New Delhi ,Emmanuel Macron ,Macron ,Delhi ,AI Summit ,Prime Minister… ,
× RELATED பொய் குற்றச்சாட்டுக்களை கூறி அவதூறு...