- சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்
- மதுரை
- உயர் நீதிமன்றம்
- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்
- கார்த்திக்
- நீதிமன்றம்...
மதுரை: எஸ்ஐ தேர்வில் தவறான விடைகளுக்கு கூடுதல் மதிப்பெண் கோரிய வழக்கில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கார்த்திக் உள்ளிட்ட 6 பேர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு காவல் துறையில் காலியாகவுள்ள 299 எஸ்ஐ பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த டிச.21ல் நடந்தது. இந்த தேர்வில் 4 வினாக்களில் விடைகள் தவறாக வழங்கப்பட்டிருந்தன. தவறான விடைகள் வழங்கப்பட்டிருந்த நான்கு வினாக்களுக்கு தலா 0.5 மதிப்பெண்களை வழங்க கோரி மனு அளித்திருந்தோம்.
இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, எஸ்ஐ தேர்வில் தவறாக விடைகள் வழங்கப்பட்டிருந்த 4 வினாக்களுக்கும் கூடுதல் மதிப்பெண்களை வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, மனு தொடர்பாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் முதல் வாரத்திற்கு தள்ளி வைத்தார்.
