×

வாசுதேவநல்லூர் ஜும் ஆ பள்ளிவாசலுக்கு ரூ.7.50 லட்சம் பராமரிப்பு நிதி

சிவகிரி,பிப்.11: வாசுதேவநல்லூர் ஜூம் ஆ பள்ளிவாசலுக்கு தமிழ்நாடு வக்பு வாரியத்தின் மூலம் பராமரிப்பு பணிகளுக்காக ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. முதற்கட்டமாக ரூ.7.50 லட்சம் காசோலையினை வக்பு வாரிய தலைவர் நவாஸ் கனி எம்பி பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் ஜமாத் கமிட்டி தலைவர் சாகுல்கமீது, துணைத் தலைவர் செய்யது திவான் அலி, செயலாளர் ஷாகுல்ஹமீது, பொருளாளர் மைதீன் பிச்சை, முஸ்லிம் நலச் சங்க தலைவர் செய்யது திவான், துணைத் தலைவர் மைதீன், ஒருங்கிணைப்பாளர் பாதுஷா, முகம்மது இத்ரீஸ், செயலாளர் செய்யது மஜீத், உமர் கத்தா,நஜீம்,மசூது, காதர் மைதீன், ஜாமல் முகைதீன், இஸ்மாயில் கனி, செய்யது அலி, காமில் ஹூதா, செய்யது அலி, காஜா மைதீன், அம்ஜத் கான், முகம்மதுர பீக், முகம்மது யூசப், ஆஷிக்அலி, சேக் முகம்மது, திவான் மைதீன், பாவா, அப்துல்நபீஸ், செய்யது அலி, திவான்ஷா, முகம்மது நியஸ், முகம்மது ஹனீப், மைதீன்ஷா, மைதீன், ரஹ்மான், ஜமாத் கமிட்டி உறுப்பினர்கள் நாகூர் மீரான், முகம்மது அப்பாஸ், உமர் கத்தா, முகைதீன் அப்துல் காதர், செய்யது முகம்மது, விஎம் சேட், முகமது உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளிவாசல் திறப்பு விழாவை சிறப்பாக நடத்த உதவிய இளைஞர்களை ஜமாத் கமிட்டி பொறுப்பாளர்கள் பாராட்டி கவுரவித்தனர்.

Tags : Vasudevanallur Jum A Mosque ,Sivagiri ,Tamil Nadu Waqf Board ,Waqf ,Board ,Nawaz Kani ,Jamaat… ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்