×

தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற்ற பெண்ணின் வயிற்றில் நூல்கள்

செங்கல்பட்டு, பிப்.11: செங்கல்பட்டு நகர பகுதியான களத்து மேட்டுத்தெருவில் வசித்து வரும் இளம் வழக்கறிஞர் ஒருவரின் மனைவியை பிரசவத்திற்காக கடந்த 15.5.2023 அன்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்தனர். 17.5.2023 அன்று அப்போது பணியில் இருந்த மருத்துவர்கள் ஆபரேஷன் செய்ததையடுத்து பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த வாரம் அந்த பெண்ணுக்கு ஆப்ரேஷன் செய்த வயிற்று பகுதியில் ரத்ததுடன் சீல் வரத் துவங்கியது. பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தபோது வயிற்று பகுதியில் தையல் போடப்பட்ட இடத்தில் ரத்தக்கட்டியும், இரண்டு வெள்ளை நிற நூல்களும் இருப்பது தெரிய வந்தது. அதனை வெளியே எடுப்பதற்கு மீண்டும் ஆபரேஷன் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். எனவே வழக்கறிஞர், மனைவிக்கு பிரசவம் பார்த்த சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து நீதி கிடைக்க வழிவகை செய்யுமாறு வழக்கறிஞர் தரப்பில் மருத்துவமனை முதல்வரிடம் புகார் அளித்தனர். ஆனால் அதற்கு மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமான பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Chengalpattu ,Kalathu Mettuttheru ,
× RELATED வல்லக்கோட்டை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு