×

தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி ‘முட்டை’: ஒன்றிய அரசை கண்டித்து திமுகவினர் போஸ்டர்

மதுராந்தகம், பிப்.5: ஒன்றிய அரசு பட்ஜெட்டை கண்டித்து தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி \”முட்டை\” என்று உத்திரமேரூர் பகுதிகளில் திமுகவினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். பாஜ அதிமுக ஒன்றிய அரசு 2026 பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு புதிய திட்டங்கள், புதிய அறிவிப்புகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பதால் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்தில் மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ ஆலோசனைப்படி ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் வேடபாளையம், ஆணைப்பள்ளம், மணித்தோட்டம் பட்டாங்குளம், அம்மையப்பநல்லூர், கட்டியாம்பந்தல் ஜங்ஷன், திருப்புலிவனம் ஆகிய கிராமங்களில் உள்ள பொது இடங்களில் ‘பாஜ-அதிமுக ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய நிதி முட்டை’ என்ற வாசகங்களுடன் முட்டை படத்துடன் கூடிய சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். இந்த சுவரொட்டிகளை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். இதேபோன்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடி தமிழ்நாட்டில் டபுள் இன்ஜின் அரசாங்கம் அமையும் என்று பேசி இருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டப்பா இன்ஜின் தமிழ்நாட்டில் ஓடாது என்று சுவரொட்டிகளை ஒட்டி திமுகவினர் பரபரப்பு ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu ,DMK ,Union government ,Madhurantakam ,Uthiramerur ,BJP ,AIADMK Union government ,
× RELATED மாமல்லபுரத்தில் 2 நாட்கள் நடைபெற்ற...