×

ஏற்கனவே ஒரு காதல் தோல்வியில் முடிந்த நிலையில் வேறொரு காதலனை கரம்பிடித்த நடிகை: இத்தாலியில் கோலாகல திருமணம்

மிலன்: பிரபல நடிகை நித்யாமி சிர்கே தனது நீண்ட நாள் காதலனைத் திருமணம் செய்துகொண்டார். பிரபல சின்னத்திரை நடிகை நித்யாமி சிர்கே என்பவரும், நடிகர் சாந்தனு மகேஸ்வரரும் காதலித்து வந்தனர். ஆனால் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர். இதன் பின்னர் திரைத்துறையில் இருந்து சற்று விலகிய நித்யாமி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்குக் குடிபெயர்ந்தார். அங்கு உளவியல் தொடர்பான உயர்கல்வி பயின்று வரும் அதே வேளையில், சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை கூறி தொடர்ந்து இயங்கி வருகிறார்.

இந்நிலையில், தனது நீண்ட காலக் காதலரான மைக் மசி என்பவரை கடந்த 8ம் தேதி இத்தாலியில் வைத்து நித்யாமி திருமணம் செய்துகொண்டார். இத்தாலியின் புகழ்பெற்ற கோமோ ஏரிக்கரையில் இவர்களது நிச்சயதார்த்தம் ஏற்கனவே நடைபெற்ற நிலையில், தற்போது மிகவும் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.

இந்தத் திருமணத்தில் நித்யாமி மின்னும் மலர் வேலைப்பாடுகள் கொண்ட பாசிப் பச்சை நிற உடையும், மைக் மசி பச்சை நிற கோட்டும் அணிந்திருந்தனர். தனது திருமணப் புகைப்படங்களைச் சமூக வலைதளத்தில் நித்யாமி பகிர்ந்துள்ளார். இவர்களுக்குத் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இணையம் வாயிலாகத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags : Italy ,Milan ,Nithyami Sirke ,Shanthanu Maheshwar ,
× RELATED சில பருப்பு வகைகள் நீக்கம்...