- பொது குறை மறுசீரமைப்பு நாள்
- கலெக்டர் அலுவலகம்
- திருவள்ளூர்
- திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம்
- கலெக்டர்
- எம். பிரதாப்
திருவள்ளூர், பிப்.10: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் தலைமையில், பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 442 மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதி உள்ள பயனாளிகளுக்கு அரசு நல திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை கலெக்டர் பாலமுருகன், கலால் உதவி ஆணையர் கணேசன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
