×

விளாத்திகுளத்தில் காங். செயல்வீரர்கள் கூட்டம்

விளாத்திகுளம், பிப். 10: விளாத்திகுளத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாவட்ட தலைவருடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் பெத்துராஜ், நகர செயலாளர் ஞானராஜ், வட்டார தலைவர் போத்திராஜ் உள்பட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணி ,விளாத்திகுளம் தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் பணி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது.

Tags : Congress ,Vilathikulam ,Congress party ,Thoothukudi North District ,President ,Perumalsamy ,
× RELATED பூவாளூர் திருமூலர் நாதர் கோயிலில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு விழா