- தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்
- நீடாமங்கலம்
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மண்டல பொதுக்குழு கூட்டம்
- பொதுக்குழு
- தமிழ்
- தமிழ்நாடு
- முதன்மை
- பள்ளி
- ஆசிரியர்கள்
- கூட்டணி நீடாமங்கலம் பிராந்தியம்
- நீடாமங்கலம் தனியார் தொடக்கப்பள்ளி
- பிராந்தியத் தலைவர்
- தர்மராஜ்…
நீடாமங்கலம்,பிப்.11: நீடாமங்கலத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார பொதுக்குழு கூட்டம் நடந்தது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நீடாமங்கலம் வட்டாரக் கிளையின் பொதுக்குழுக் கூட்டம் நீடாமங்கலம் தனியார் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டாரத் தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். மாநிலத் துணைச் செயலாளர் ஜூலியஸ், மாவட்டத் துணைத் தலைவர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் முத்துராஜ் வரவேற்றார். வட்டார செயலாளர் தமிழரசன் வரவு செலவு அறிக்கை வாசித்தார். வட்டார துணை தலைவர் பாலமுருகன் நன்றி கூறினார்.
