×

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இடைகாலில் இலவச மருத்துவ முகாம்

கடையநல்லூர், பிப்.10: கடையநல்லூரை அடுத்த இடைகாலில் நவீன் ஹைடெக் குரூப் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம், இலவச உயர்கல்வி சேர்க்கை முகாமை திமுக முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை தலைமை வகித்து துவக்கி வைத்தார். கடையநல்லூர் நகர செயலாளர்கள் அப்பாஸ், பீரப்பா, யூனியன் சேர்மன் சுப்பம்மாள், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஐவேந்திரன் தினேஷ், அச்சன்புதூர் பேரூர் செயலாளர் வெள்ளத்துரை, வழக்கறிஞர் காசிராஜன், காங்கிரஸ் சிவராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய செயலாளர் சுரேஷ் வரவேற்றார். மாநில விவசாய அணி இணை செயலாளர் அப்துல்காதர், வடகரை சேர்மன் ஷேக்தாவுது, பண்பொழி ராஜராஜன், மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி, நயினாரகரம் ஊராட்சி தலைவர் முத்தையா வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் வாசுதேவன், கிளை நிர்வாகிகள் வேல், ஸ்டாலின், செல்லப்பா, ஜெயபாலன், பீர் முகைதீன், வடிவேல், மாரியப்பன், பழனி, முருகையா, அன்பழகன், கொத்தாலகுமார், முத்துக்குமார், சுரேஷ், கோவில்பிள்ளை பங்கேற்றனர். முகாமில் நெல்லை செந்தூர் மருத்துவமனை மருத்துவர்கள் சதீஷ்குமார், ராஜசேகர், ஆர்த்தி ராஜசேகர், முகமது ஜாபர்அலி, சாம்டிடஸ் தலைமையிலான குழுவினர் மருத்துவ பரிசோதனைகளை செய்தனர். முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட தலைமை உதயநிதி நற்பணி மன்ற பொருளாளர் நவீன் செய்திருந்தார்.

Tags : Mu. ,K. ,Free medical ,camp ,Stalin ,Kadianallur ,Naveen Hi-Tech Group ,M.O. K. ,Free Higher Education Admission ,former ,District Officer ,Selaturai ,Free Higher Education Admission Camp ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்