×

தமிழகத்தில் இருந்து கடத்திய ரூ.2 கோடி மதிப்புள்ள மாத்திரைகள் பறிமுதல்: இலங்கையை சேர்ந்த 2 பேர் கைது

ராமேஸ்வரம்: தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.2 கோடி வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைதாயினர். தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக பொருட்கள் கடத்தப்பட்டு, பின்னர் சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இதுபற்றி அறிந்த இலங்கை காவல் துறையினர் கொழும்பு அருகே வத்தளை நெடுஞ்சாலையில் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் ஒரு சரக்கு வாகனத்தில் 75க்கும் மேற்பட்ட பண்டல்களில் 7 லட்சத்து 44 ஆயிரத்து 500 வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும், சரக்கு வாகனத்தில் இருந்த கொழும்புவைச் சேர்ந்த இரண்டு பேரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள் அந்நாட்டு சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடத்தலில் மேலும் தொடர்புடையவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறனர். பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.2 கோடியாகும்.

Tags : Tamil Nadu ,Rameswaram ,Sri Lanka ,
× RELATED ‘வெள்ளிமலை’ படத்தின் மூலம் நடிகை...