×

குடும்பத்தினர் நடத்திய கொடுமைக்கு மத்தியில் நான் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம்: பிரபல பாப் பாடகி பகீர் குற்றச்சாட்டு

 

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் பிரபல பாப் இசைக்கலைஞரான பிரிட்னி ஸ்பியர்ஸ் (44), கடந்த 2021ம் ஆண்டு வரை சுமார் 13ம் ஆண்டுகள் தனது தந்தையின் முழு கட்டுப்பாட்டில் இருந்து வந்தார். அப்போது தனது அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதாகவும், குடும்பத்தினர் தன்னைத் தனிமைப்படுத்தித் துன்புறுத்தியதாகவும் அவர் ஏற்கனவே பலமுறை பகிரங்கமாகப் புகார் அளித்து இருந்தார். இந்நிலையில், ேநற்று முன்தினம் தனது இணையதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதில், ‘எனது குடும்பத்தினர் என்னை நடத்திய விதத்திற்கு நான் இன்னும் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம். தற்போது அவர்களை நினைத்தாலே எனக்குப் பயமாக இருக்கிறது. தற்போது எனது பக்கத்து வீட்டாருடன் நேரம் செலவிடுவது மற்றும் இனிப்புப் பலகாரங்கள் செய்வதில் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. மேலும் கால் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு மாதமாகத் என்னால் டான்ஸ் ஆட முடியவில்லை’ என்று அவர் தனது தற்போதைய நிலையை விளக்கியுள்ளார்.

Tags : Bakeer ,Los Angeles ,Britney Spears ,United States ,
× RELATED பாகிஸ்தான் தலைநகரில் தற்கொலை படை...