×

சபாநாயகர் ஓம் பிர்லா பேச்சுக்கு எதிர்ப்பு; பிரியங்கா காந்தி, ஜோதிமணி காட்டம்!

 

டெல்லி: சபாநாயகர் ஓம் பிர்லா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரியங்கா காந்தி, ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். சபாநாயகர் ஓம் பிர்லா பேச்சுக்கு மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சபாநாயகர் ஓம் பிர்லா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறியதாவது; சபாநாயகரின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. அவை தொடர்ந்து செயல்படவே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.

சபாநாயகர் ஓம் பிர்லாவின் குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது. சபாநாயகரின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. பிரதமருக்கு எதிராக போராட்டம் நடத்த மட்டுமே இருந்தோம். திசைதிருப்பும் நடவடிக்கையில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபடுகிறது. நாங்கள் போராடுவோம், கேள்வி கேட்போம் என பயந்துகொண்டு பிரதமர் அவைக்கு வரவில்லை. சீன விவகாரத்தில் ராணுவத்தை கைவிட்டது, இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் போன்ற விஷயங்களில் இருந்து தங்களை பாதுகாக்க இப்படி பொய் தகவலை பரப்புகிறார்கள். என்று கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, சபாநாயகர் ஓம் பிர்லா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரியங்கா காந்தி பேட்டி அளித்துள்ளார். பிரியங்கா காந்தி கூறுகையில், பிரதமரை தாக்க முயற்சித்ததாக சபாநாயகர் கூறுவது அப்பட்டமான பொய். சபாநாயகர் ஓம் பிர்லாவை பொய் பேச வைக்கிறது பாஜக அரசு. சபாநாயகருக்கு பின்னால் பிரதமர் ஒளிந்து கொண்டிருக்கிறார். பின்னால் ஒளிந்து கொண்டு சபாநாயகரை அனைத்தையும் சொல்ல வைக்கிறார் மோடி. என்று கூறியுள்ளார்.

 

Tags : Speaker ,Om Birla ,Priyanka Gandhi ,Jyotimani ,Delhi ,Lok Sabha ,Modi ,
× RELATED நான் பேசுவதை கேளுங்கள், என்னை பேச...