நாமக்கல், பிப்.5: நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.115 ஆக குறைந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் நேற்று, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முட்டை விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 525 காசாக நீடித்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நேற்று தேசிய கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கறிக்கோழியின் பண்ணை கொள்முதல் விலையில் ரூ.5 குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒரு கிலோ கறிக்கோழியின் பண்ணை கொள்முதல் விலை ரூ.115 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. கறிக்கோழியின் விற்பனை சற்று குறைந்துள்ளதால், விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
