- ஆசிய
- Melakottaiyur
- துணை
- முதல் அமைச்சர்
- உதயநிதி
- இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு
- தமிழ்நாடு சைக்கிள் ஓட்டுதல் சங்கம்
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
- ஆசிய கோப்பை 2026
- போட்டி
- தமிழ்நாடு விளையாட்டு மற்றும்
- பௌதீக
- கல்வி பல்கலைக்கழகம்
திருப்போரூர். ஜன.30: இந்திய சைக்கிளிங் சம்மேளனம், தமிழ்நாடு சைக்கிளிங் கழகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து ஆசிய கோப்பை 2026 சைக்கிள் போட்டிகளை நேற்று தொடங்கியது. மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை முதன்மை செயலாளர் சத்யபிரதா சாகு தலைமை தாங்கினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத செட்டி வரவேற்றார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக தனி நபர் சைக்கிளிங் மற்றும் 7 பேர் கொண்ட குழுப்போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை துணை முதல்வர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, அரவிந்த் ரமேஷ், வரலட்சமி மதுசூதனன், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் எல்.இதயவர்மன், துணைத்தலைவர் சத்யா சேகர், திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், இந்திய சைக்கிளிங் பெடரேஷன் அமைப்பின் தலைவர் ஓங்கார் சிங், பொதுச் செயலாளர் மனீந்தர்பால் சிங், தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேஷன் தலைவர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாடுகளில் இருந்து சைக்கிள் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 வீரர்களும், இந்திய அளவில் 30 வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.
