×

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 2ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

 

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு 2000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று 1,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று 48 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 229கனஅடியாக அதிகரித்ததுள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை விட திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 92.42 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 92.27 அடியானது. நீர் இருப்பு 55.28டிஎம்சியாக உள்ளது.

Tags : Okanekal caviar ,Pennacaram ,Okanakal caviar ,Kaviri Reservoir ,Okanakal Caviri ,Matur Dam ,
× RELATED “அன்னம் தரும் அமுதக்கரங்கள்”...