×

அரியலூர் அண்ணா நினைவுநாள் அனுசரிப்பு: சிலைக்கு திமுக, அதிமுக, மதிமுகவினர் மரியாதை

அரியலூர், பிப். 4: அண்ணா நினைவு நாளையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள அவரது சிலைகளுக்கு திமுக, மதிமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்து நேற்று அஞ்சலி செலுத்தினர். அரியலூரிலுள்ள அண்ணா சிலைக்கு திமுக சார்பில் நகரச் செயலர் முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் லதாபாலு, ஒன்றிய செயலாளர்கள் கென்னடி, அசோக் சக்கரவர்த்தி,

அன்பழகன், இளையராஜா ,திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலு, நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், நகர் மன்ற துணைத் தலைவர் கலியமூர்த்தி, திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அருண் ராஜா , அரியலூர் நகர அவைத் தலைவர் மாலா தமிழரசன் , நகர பொருளாளர் ராஜேந்திரன், மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, மாவட்டச் செயலர் ராமநாதன், நகர செயலாளர் மனோகரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, கொளஞ்சி மற்றும் மதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர். அதிமுக சார்பில் முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், நகர கழகச் செயலாளர் செந்தில், மற்றும் கட்சி நிர்வாகிகள் பேரணியாகச் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

 

Tags : ARYALUR ,ANNA ,DIMUKA ,ADAMUKA ,MADIMUKAVINAR ,Ariyalur ,Madimuka ,Adimuka ,Demudika ,Ariyalur district ,City Secretary ,Murukesan ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்