×

திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் முன்னேற்றம்: தமிழ்நாடு அரசு அறிக்கை

 

சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்; முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் (CM ARISE) என்ற திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் நிதியாண்டில் ரூ.75.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆண்கள் 2726 நபர்களுக்கும் மகளிர் 1226 ஆகமொத்தம் 3952 3952 பயனாளிகளுக்கு புதுமையான திட்டங்களுக்கு (Innovative Project) ரூ.74.75 கோடி மானியத்துடன் கூடிய கடன் விடுவிக்கப்பட்டு சுய தொழில் செய்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டுகளில் நான்கு சக்கர வாகனம்(கனரக, இலகுரக) 1203 பயனாளிகளுக்கு ரூ. 3711.79 லட்சமும், மூன்று சக்கர வாகனம் 648 பயனாளிகளுக்கு ரூ.833.73 லட்சமும், மின்சாதன பொருட்கள் மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் செய்ய 447 பயனாளிகளுக்கு ரூ.843.31 லட்சமும், கடைகள் (தையலகம், அழகு நிலையம், மளிகை, எழுதுபொருட்கள் நிலையம் மற்றும் பல) தொழில்கள் செய்ய 1600 பயனாளிகளுக்கு ரூ.2774.42 லட்சமும், பால்பன்ணை அமைத்தல் தொழில் செய்ய 566 பயனாளிகளுக்கு ரூ.317.81 லட்சமும் மற்றும் இதர தொழில்ளுக்கு 223 பயனாளிகளுக்கு ரூ.494.38 இலட்சமும் என மொத்தம் 4687 பயனாளிகளுக்கு ரூ.8975.44 லட்சம் மானியத்துடன் கூடிய கடனாக விடுவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் ஆதிதிராவிடர் முன்னேற்ற திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் நிதியாண்டில் ரூ.66.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 1666 ஆண்களுக்கும் 5810 மகளிர்களுக்கும் ஆக மொத்தம் 7476 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன் விடுவிக்கப்பட்டு சுய தொழில் செய்து வருகிறார்கள். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக மக்களின் வாழ்வாதாரத்தையும் தொழில் வளர்ச்சியையும் மேம்படுத்தும் நோக்கத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம், 1975ன் கீழ் படி பதிவு செய்த TAHDCO Adi Dravidar & Tribal Advancement Society (TATAS) என்ற பெயரில் சமூக அமைப்புகளை உருவாக்கி இத்திட்டத்தில் 2025-26 ஆம் நிதியாண்டில் 1189 பயனாளிகளுக்கு ரூ.7.39 கோடியும் கடந்த ஆண்டுகளில் 1408 பயனாளிகளுக்கு ரூ. 7.74 கோடியும், ஆக மொத்தம் 2596 பழங்குடியின பயனாளிகளுக்கு ரூ.15.13 கோடி சிறு வணிக கடன் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் இத்திட்டத்தில் 2025-26 ஆம் நிதியாண்டில் 162 பயனாளிகளுக்கு ரூ.1.62 கோடியும் கடந்த ஆண்டுகளில் 1352 பயனாளிகளுக்கு ரூ. 12.73 கோடியும், ஆக மொத்தம் 1514 ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு ரூ.14.35 கோடி சிறு வணிக கடன் வழங்கப்பட்டு அவர்களின் சுய தொழில் வாழ்வதாரத்தை மேம்படுத்தப்பட்டு உள்ளது. தாட்கோ வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த, 60 மகளிர் சுய உதவிக் குழுவினரைக் கொண்டு சமூக நீதி விடுதியில், தங்கிப்பயிலும் கல்லுாரி மாணவர்களுக்கு, குளியல் சோப்பு, ஷாம்பு, எண்ணெய், சலவை தூள், சலவைசோப்பு, உள்ளிட்ட ஏழு பொருட்கள் அடங்கிய, பொலிவு பராமரிப்பு பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிதியாண்டில் தமிழ்நாடு அரசு ரூ.75 கோடியும், ஒன்றிய அரசு ரூ. 37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த மாதமே முழுமையாக செலவிடப்பட்டுவிட்டது. இதன் வாயிலாக மேற்கண்ட திட்டத்திற்கு இந்தியாவிலேயே செலவிடப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. ஆதிதிராவிடர் பழங்குடியினர் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கு தனி கவனம் செலுத்தி அவர்களின் வாழ்வதாரத்தை மேன்மைப்படுத்திட இவ்வரசு பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பயன்படுத்தி கொள்ளுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu government ,Entrepreneurial Initiative for Indigenous ,-Economic Development ,CM ARISE ,
× RELATED சென்னையில் தொழில் முனைவோருக்கான 3 நாள்...