திருப்பத்தூர்: கோவையில் இருந்து நேற்று முன்தினம் சென்னைக்கு ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் ரயில்வே மேம்பால பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, தண்டவாளத்தின் மீது நீளமான இரும்பு ராடு இருப்பதை கவனித்த இன்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். தகவல் அறிந்து அதிகாரிகளும், போலீசாரும் வந்து தண்டவாளத்தில் இருந்த நீளமான இரும்பு தகடை அகற்றினர். சிறிது காலதாமதத்திற்கு பிறகு ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. தண்டவாளத்தில் இரும்பு ராடை வைத்த நபர்கள் யார், ரயிலை கவிழ்க்க சதி செய்தார்களா என ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
