×

திருப்பூர் கலெக்டர் ஆபீசுக்கு துப்பாக்கியுடன் வந்த நபர்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ராஜ்குமார் தனது சொகுசு காரில் வந்தார். அந்த காரை போலீசார் சோதனை செய்ததில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட லென்ஸ் பொருத்தப்பட்ட ஏர் கன் 0.22 நவீன ரக துப்பாக்கி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதற்கான உரிய ஆவணங்கள் அவர் வைத்திருந்தார். போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், புதிதாக மற்றொரு துப்பாக்கிக்கு உரிமம் பெறுவதற்கு கலெக்டர் அலுவலகம் வந்தபோது தவறுதலாக இந்த துப்பாக்கியை கொண்டு வந்ததாக தெரிவித்தார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்பதற்காக இந்த துப்பாக்கியை கொண்டு செல்வதும் தெரியவந்துள்ளது.

Tags : Tiruppur Collectorate ,Tiruppur ,Tiruppur District Collectorate ,Rajkumar ,Moolanur ,Tiruppur district ,
× RELATED வந்தே பாரத்தை கவிழ்க்க சதி