×

ஒன்றிய அரசின் பட்​ஜெட் மக்​கள் விரோத பட்ஜெட்: மம்தா பானர்ஜி கடும் சாடல்

கொல்கத்தா: வரும் 2026-27ம் ஆண்டுகான ஒன்றிய அரசின் பட்​ஜெட் மக்​கள் விரோத பட்ஜெட் என மம்தா பானர்ஜி கடுமை​யாக சாடி​யுள்​ளார். மேற்குவங்க முதல்​வர் மம்தா பானர்ஜி, டெல்​லி​யில் இன்று தலை​மை தேர்​தல் ஆணையர் ஞானேஷ் குமாரை சந்​திக்க உள்​ளார். இதற்​காக, அவர் நேற்று கொல்​கத்தா விமான நிலை​யத்​துக்கு வந்தார். அப்போது நிருபர்களிடம் கூறிய​தாவது: ஒன்றிய பட்​ஜெட் திசையற்றது, தொலைநோக்​கு பார்​வையற்​றது, செயலற்றது. இது பெண்​கள், விவ​சா​யிகள், மாணவர்​கள் மற்​றும் எஸ்​சி, எஸ்​டி, ஓபிசி பிரி​வினருக்கு எதி​ரானது. குறிப்​பாக பட்ஜெட்டில் மேற்கு வங்கத்துக்கான அறி​விப்பு​கள் இடம்​பெற​வில்​லை. சமூக பாது​காப்​பு திட்டங்​களும் இல்​லை.

தேர்​தலில் தோல்​வியடைவோம் என்ற அச்​சத்​தில் பொருளா​தார ரீதி​யாக மேற்கு வங்​கத்தை அவர்​கள் புறக்​கணிக்​கிறார்​கள். ஒன்றிய பட்​ஜெட் பொய்​களின் குவிய​லாக உள்ளது. ஜிஎஸ்டி மூலம் மேற்கு வங்​கத்​தில் இருந்து வரு​வாயை பெறும் ஒன்றிய அரசு, மாநிலத்​திற்கு அதை திருப்பி தரு​வ​தில்​லை. நான் ரயில்வே அமைச்​ச​ராக இருந்​த​போது அறி​வித்த டன்​குனி-சூரத் சரக்கு வழித்​தட திட்​டம் தொடர்ந்து முடக்​கப்​பட்​டுள்​ளது. இது ஒரு மக்​கள் விரோத வெற்று பட்ஜெட்.
இவ்​வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

திரிண​முல் பொதுச் செய​லா​ளர் அபிஷேக் பானர்ஜி கூறுகை​யில், “81 நிமிட பட்​ஜெட் உரை​யில் மேற்கு வங்​கம் என்ற பெயரே இடம் பெற​வில்​லை. ஒன்றிய அரசு மேற்கு வங்க மக்​களை வங்க தேசத்​தவர்​களாக பார்க்கிற​தா? 2021 தேர்​தல் தோல்விக்​கு பிறகு மாநிலத்​துக்​கான நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்​துள்​ளது. இதற்கு வரும் தேர்​தலில் மக்​கள் தகுந்​த பதிலடி கொடுப்​பார்​கள்​” என்​றார்​.

Tags : Union government ,Mamata Banerjee ,Kolkata ,West Bengal ,Chief Minister ,Chief Election Commissioner ,Gyanesh Kumar ,Delhi ,
× RELATED சீன ஆக்கிரமிப்பு பற்றி ராகுல்...