ட்ரம்ப் ஈரானை தாக்கினால் அது ஒரு பிராந்திய போராக மாறும் என்றும், தாக்குதல் நடத்துவோர் மீது மிகப்பெரிய பதிலடி கொடுப்போம் என்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அலி காமேனி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதாக கூறி அமெரிக்கா மிரட்டல் விடுத்து வரும் நிலையில், ‘எங்களைச் சீண்டினால் ஈரானிய தேசம் மிகக் கடுமையான பதிலடியைத் தரும்’ என காமேனி ஆவேசம்.
