- அமைச்சர்
- ஈ.வி.வேலு
- கார்ல் மார்க்ஸ்
- கல்யாணர்
- என்.எஸ்.கிருஷ்ணன்
- சென்னை
- பொதுப் பணிகள்,
- மற்றும் சிறு துறைமுகங்கள்
- கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்
- எழும்பூர்…
சென்னை: பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று (01.02.2026) சென்னையில் நிறுவப்பட்டு வரும் கார்ல் மார்க்ஸ் மற்றும் கலைவாணர் N.S. கிருஷ்ணன் ஆகியோரின் சிலை கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை, எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் நிறுவப்பட்டு வரும் உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸின் சிலை கட்டுமான பணிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். அமைச்சர் சிலையின் அமைப்பு, பணிகளின் நிலை ஆகியவற்றினை ஆய்வு செய்து, பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார். அந்த ஆய்வில்,, பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் S. கார்த்திகேயன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, சென்னை, சேப்பாக்கம், கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவப்பட்டு வரும் தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை சக்கரவர்த்தி கலைவாணர் N.S. கிருஷ்ணனின் சிலை கட்டுமான பணிகளையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டார். அமைச்சர் சிலையின் அமைப்பு, பணிகளின் நிலை ஆகியவற்றினை ஆய்வு செய்து, பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார். அந்த ஆய்வில், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் S. முத்தமிழரசு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
