சென்னை: வணிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; இன்று வணிக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டிருப்பது சிறு வணிகர்கள் மற்றும் உழைக்கும் மக்களை நேரடியாக பாதிக்கும் மக்கள் விரோத முடிவாகும். ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில், இந்த விலை உயர்வு கூடுதல் சுமையை மக்கள் மீது திணிப்பதாக உள்ளது.
விலையேற்றங்களின் மூலம் தோல்விகளை மறைக்கும் ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நலனுக்காகவும், விலையேற்ற அரசியலுக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சி உறுதியான அரசியல் போராட்டத்தை என்றென்றும் தொடரும்.
