×

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 47 லட்சம் வாக்காளர்கள் விண்ணப்பிக்கவில்லை

சென்னை: தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 47 லட்சம் வாக்காளர்கள் இதுவரை விண்ணப்பம் செய்யவில்லை. தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். மூலம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 22 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. 2.50 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க மனு அளித்துள்ளனர். தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் பிப். 17ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாட்டுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu, S. I. R. ,
× RELATED களை கட்டியது பழநி; இன்று...