×

மோடி பீகாருக்கு சென்றால் தமிழர்கள் மோசம் என்பார்: செல்வபெருந்தகை சுளீர்

 

திருவாரூர்: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திருவாரூரில் அளித்த பேட்டி: எடப்பாடி பழனிசாமி போல் கனிமொழி முகத்தை மூடிக்கொண்டு மாற்று காரில் சென்று ராகுல் காந்தியை சந்திக்கவில்லை. சிங்க பெண்ணாக நேரில் சென்று சந்தித்துள்ளார். ஒரு வாரத்தில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும். எங்களுக்கான தேவைகளை கேட்டு பெறுவோம். அதற்காக திமுகவுக்கு நெருக்கடி அளிக்க மாட்டோம்.

பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்தால் தமிழ் மொழி சிறந்த மொழி, தமிழர்கள் பாரம்பரியமானவர்கள் என்று பேசுவார். அதே நேரத்தில் பீகாருக்கு சென்றால் அங்கு தமிழர்கள் மோசமானவர்கள் என்று பேசுவார். அதிமுக, பாஜ கூட்டணி பொருந்தாத கூட்டணி. தமிழகத்தில் பிரசாரத்துக்கு வந்த பிரதமர் மோடி ஒரு இடத்தில் கூட எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடவில்லை என்றார்.

 

Tags : Modi ,Bihar ,Tamils ,Selvaperundagai Suleer ,Thiruvarur ,Tamil Nadu Congress ,President ,Selvaapperundagai ,Thiruvaroor ,Edappadi Palanisami ,Rahul Gandhi ,
× RELATED ரூ.3.27 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள...