×

சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு: சென்னையில் நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை

சென்னை: சபரிமலை துவாரபாலகர் சிலைக்கு முலாம் பூச வழங்கப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வுக் குழு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரக பாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசியபோது 45 கிலோ தங்கம் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக அம்மாநில கூடுதல் டிஜிபி வெங்கடேஷ் தலைமையிவான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தங்கமுலாம் பூசும் செலவை கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உன்னிகிருஷ்ணனிடம் 10 மணி நேரம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்திய பின்னர் அவரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்தது, புகாரின்பேரில் உன்னி கிருஷ்ணன் போத்தி உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சபரிமலை தங்கத் திருட்டு விவகாரத்தில் நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். சென்னையில் உள்ள ஜெயராமின் வீட்டில் வைத்து இந்த விசாரணை நடத்தப்பட்டது.

அதாவது சபரிமலை துவார பாலகரின் சிலையிலிருந்த தங்கம் சென்னைக்கு பழுது பார்க்க கொண்டு வரப்பட்ட போது நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்து பூஜை செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஜெயராம் கூறுகையில், நான் 40 ஆண்டுகளாக சபரிமலைக்கு சென்று வருவதால் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரை எனக்கு தெரியும்.

என் வீட்டில் வைத்து பூஜை செய்தால் வளம்பெறும் என அவர் சொன்னால்தான் பூஜை செய்தோம் என ஜெயராம் தெரிவித்தார். தங்கத் திருட்டு வழக்கில் 90 நாட்களுக்குள் ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததை அடுத்து சிறப்பு புலனாய்வு துறை விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நடிகர் ஜெயராம், இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்படுவார் என சொல்லப்படுகிறது.

Tags : Sabarimala ,Jayaram ,Special Investigation Team ,Chennai ,Dwaraka ,Sabarimala Ayyappa ,
× RELATED “திமுக கூட்டணிக்கு 45% வாக்குகள் என்பதே...