சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக அரசுக்கு பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் புகழாரம் சூட்டினார். சென்னை மாநகராட்சியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. எதிர்க்கட்சி வார்டு என்று பாராமல் மக்களுக்கான பல்வேறு பணிகளை சென்னை மாநகராட்சி செய்து கொடுத்துள்ளது. பாஜகவை கவுன்சிலர் என்ற மனநிலை இல்லாமல் எனது வார்டில் பணிகளை செய்து கொடுத்தற்கு திமுக அரசுக்கு நன்றி. எனது வார்டில் 80% வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தாலும் இன்னும் 20% வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
எனக்கு அரசு ஒத்துழைப்பு கொடுத்து, எனது வார்டு பணிகளை நிறைவேற்றி கொடுத்ததற்கு நன்றி. 4 ஆண்டுகளில் நான் கொடுத்த வாக்குறுதிகளில் 80 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன்; ஒத்துழைப்பு தந்த அரசுக்கு நன்றி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், கே.என்.நேரு, மேயருக்கு உமா ஆனந்த் நன்றி தெரிவித்தார்.
