கோயிலில் கர்ப்பகிரகத்தை ஒட்டியுள்ள பிரகாரத்தை, உள்பிரகாரம் என அழைப்பர். மொத்தமாக கோயிலின் மதிற்சுவருக்குள் உள்ளேயே சுற்றி வருவது வெளிபிரகாரம். ஐந்து பிரகாரங்களை கொண்ட கோயில்களும் உண்டு. கோயில் இருக்கும் மலையை சுற்றி வந்தால், கிரிவலம்! திருவண்ணாமலை இதற்கு மிகவும் பிரபலம்! மலைகளை மட்டுமல்ல, புனித ஸ்தலங்களை கொண்ட பகுதிகள், புனித நதிகள், ஆகியவற்றையும் சுற்றி வருவர்! இதனை “பரிக்கிரமா’’ எனக் கூறுவர்! இத்தகைய நதி பரிக்கிரமாவில், மிகவும் பிரபலமானது நர்மதாபரிக்கிரமா… நர்மதா நதிக்கு ஒரு சிறப்பு உண்டு. அதனை முழுவதுமாக ஒரு சுற்று சுற்றிவந்து விடமுடியும். இந்த வகையில், இந்தியாவில் பரிக்கிரமாக்கள் ஏராளமாய் உள்ளன.
அரசமரம் துளசி, அக்னியாக குண்டம் என பலவற்றை சுற்றுவது நமது பண்பாடு. கோயில்களில் அங்கப் பிரதட்சணமும் பிரபலம்! அடிமேல் அடிவைத்து பிரதட்சணமும் பிரபலம்!பொதுவாக, ஒரு கோயிலுக்குச் சென்று அங்கு 21 பிரதட்சணம் செய்தால், பல நன்மைகளை தரும் என நமது மூத்தவர்கள்கூற கேட்டிருக்கலாம். யாத்ரா மற்றும் பரிக்கிரமாவுக்கு இடையே வித்தியாசம் உண்டு.
உத்திரகாண்ட்டில் உள்ள ஹரித்வார், கொளமுச் மற்றும் கங்கோத்ரிக்கு சென்று வருவது யாத்திரை! பத்ரிநாத், கேதாரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி பயணத்தை “சார்தாம் யாத்ரா’’ எனக் கூறுவர். ஜம்மு – காஷ்மீர், அமர்நாத் யாத்திரையும் நமக்கு தெரிந்ததே! ஒரு குறிப்பிட்ட இடத்தை பல பக்தியுடன் சுற்றி வருவது “பரிக்கிரமா’’!
திபெத்திய கைலாஷ் மலையை திபெத்தியர்கள், 52 கிலோ மீட்டர்கள், மிகுந்த பயபக்தியுடன்கூடி சுற்றி வருவர்! பௌத்தர்கள், எங்கு ஸ்தூபியை கண்டாலும் சுற்றி வருவர். சீனாவில்கூட, இன்றும் ஸ்தூபியை சுற்றி வருவது நடைமுறையில் உள்ளது. இனி இந்தியாவில் இப்போதும் நடைமுறையில் உள்ள சில பிரபல பரிக்கிரமாக்களை பற்றி அறிந்து கொள்வோமா!
அயோத்தி பரிக்கிரமா
சரயு நதியில் ஸ்நானம் செய்துவிட்டு, இந்த பரிக்கிரமாவை துவக்கி, 15 கிலோ மீட்டர் சுற்றி வருகின்றனர். பிரயாக், ஹரித்வார், மதுரா, காசி என பல இடங்களிலிருந்தும் பக்தர்கள், சாதுக்கள் என பல ஆயிரக் கணக்கில் கலந்து கொள்கின்றனர். இதனை “பஞ்சயோகி பரிக்கிரமா’’ என கூறுகின்றனர்.
இர்னார் யாத்திசை பரிக்கிரமா
இதனை வருடம் முழுவதும் செய்வதால், யாத்திரை எனவும், மிகுந்த அக்கறையுடன் சுற்றி வருவதால், பரிக்கிரமா எனவும் கூறுகின்றனர்! இதற்கு வைரதமலை எனவும் பெயருண்டு. குஜராத்தின் ஜூனாகாத் மாவட்டத்தில் ஜூனாகாத் நகரிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இர்னார்! இது 3661 மீட்டர் உயரம் கொண்டது. இந்த மலை, இமய மலைவிட பழமையானது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்! இங்கு மகாதேவர், தீர்த்தாங்கரர் கோயில்கள் உள்ளன.
பல காலம் தத்தாத்ரேயர் இங்கு வாழ்ந்ததாக கூறப்படுகிறது. 22வது சமண தீர்த்தங்கர் நேமிநாதர் இங்குதான் முக்தி அடைந்தார்! இந்த மலைக்கு அதிபதியாக வைணவர்கள், தாமோதரனை கூறுகிறார்கள்! இங்குள்ள ஒரு குகையில், முசுகுந்த சக்கரவர்த்தி; துயில் கொண்டிருந்தான். அப்போது ஒரு சமயம், கிருஷ்ணனை காலயவன் என்ற அரக்கன் துரத்திக் கொண்டு இந்த மலைக்கு வந்தானாம்!
கிருஷ்ணன்தான் படுத்திருக்கிறானா? என, முசுகுந்த சக்கரவர்த்தியை எழுப்பி விட்டானாம்! கண் திறந்தவர், அரக்கனை பார்க்க, அவன் அப்படியே பஸ்மம் ஆகிவிட்டானாம்.இந்த முசுகுந்த சக்கரவர்த்தியை கிருஷ்ணன் பார்த்து, பத்ரிநாத் சென்று அங்குதவம் செய்து முக்தி பெறுவாய் என அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.இந்த மலையில், அசோகர் கல்வெட்டுகூட உள்ளது. இங்கு 5 மலைகள் பிரபலம்! அவை சார்ந்து 866 கோயில்கள் உள்ளன. இவற்றில் இந்து மற்றும் சமண தெய்வங்களை காணலாம். ஆக.. இதனை வலம் வருவது பெரும் பேரராக கருதப்படுகிறது. இந்துக்கள், ஜைனர்கள் இங்கு வருடம் முழுவதும் வந்து பரிக்கிரமா செய்கிறார்கள்! ஜூனாகத் நகரில் இறங்கி எளிதில் செல்லலாம்!
கோவர்தன் பரிக்கிரமா
யாதவர்கள், மழைவேண்டி இந்திரனுக்கு வருடா வருடம் விழா எடுத்து வந்தனர். இது பற்றி கிருஷ்ணனுக்கு தெரிய வந்தபோது, நிறுத்தச் சொல்லிவிட்டார். இது பற்றியறிந்த இந்திரன், கடும் கோபம் கொண்டு, யாதவர் பகுதியில் கடும் மழை, புயல், வெள்ளத்தை பிரயோகித்தான். அப்போது பயந்து நடுங்கிய யாதவர்களை கிருஷ்ணன்; கோவர்த்தன மலையை தூக்கி மழையிலிருந்து யாதவர்களை காத்தார். இதற்கு நன்றியாக யாதவர்கள், கிருஷ்ணனுக்கு எடுக்கும் விழாதான் “கோவர்த்தன பூஜை’’.
இந்த பூஜை முடிந்ததும் விரதத்தில் இருக்கும் பக்தர்கள், கோவர்த்தன மலையை பரிக்கிரமா செய்கின்றனர். இது 21 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. இதனை நடையாக சுற்றி வருபவர்கள் இருக்கிறார்கள்! தங்களை வருத்திக் கொண்டு ஒவ்வொரு அடிக்கும் நமஸ்காரம் செய்து கொண்டு செல்பவர்களும் இருக்கிறார்கள்! பால் சொட்டில்படி (சட்டியில் பாலை ஊற்றி) பரிக்கிரமா செய்கின்றனர். மேலும் சிலர், வழி நெடுக மிட்டாய்களை கொடுத்தபடி செல்கின்றனர். தீபாவளிக்கு அடுத்த நாள் கோவர்த்தன பூஜை மற்றும் பரிக்கிரமா நடக்கிறது. சிலர், மலைக்கு புத்துயிர் ஊட்ட பாரம்பரிய மருத்துவ கன்றுகளை நட்டபடி செல்கின்றனர். பாசை கங்கா என்ற இடத்தில் துவங்கி, அங்கேயே வந்து முடிகிறது!
குருசேத்திர பரிக்கிரமா
இதனை, 48 கோஸ் பரிக்கிரமா என அழைக்கின்றனர். 200 மகாபாரத இடங்கள், தீர்த்தங்கள், கோயில்கள் தரிசித்த படி வருகிறது இந்த யாத்ரா பரிக்கிரமா!
நர்மதா பரிக்கிரமா
குஜராத்தில், ப்ரூச் நகரில் துவங்கி (அரபிக்கடலில் நர்மதா சங்கம இடம்) 2600 கிலோ மீட்டரை கால் நடையாக, வாகனங்கள் என பல வகைகளில் பரிக்கிரமா செய்கின்றனர். இப்போது 10 நாளில் சுற்றி வர சென்னையிலிருந்தே பஸ்கள், சுற்றுலாவாக விடப்படுகின்றன. பொதுவாக இந்த பரிக்கிரமா தென்கரையில் துவங்கி, ப்ரூச் சென்று, வடக்கு கரையாக புறப்பட்ட இடத்திற்கு திரும்புகிறது.
விரஜ மண்டல பரிக்கிரமா
இது 4க்ரோஷ் நீளமானது என கூறுகின்றனர். இதனை முடிக்க அதிகபட்சமாக இரண்டு மாதம்கூட ஆகலாம்! 12 காடுகள் 24 தோப்புகளை பார்வையிட இது உதவுகிறது. கிருஷ்ண பக்தர்கள் ஆர்வமாக சுற்றி வருகிறார்கள்.
பிருந்தாவன் பரிக்கிரமா
பிருந்தாவனத்தை சுற்றி, இஸ்கான் கிருஷ்ண பக்தர்கள் மேற்கொள்ளும் பரிக்கிரமா. புகழ் பெற்ற இஸ்கான் கோயிலில் துவங்கி, 10 கிலோ மீட்டரை, பத்து மணி நேரத்தில் முடிப்பது இதன் சிறப்பு விசேஷம். கொதசி.. சந்திரனின் வளர்பிறை 11வது நாட்களில் மேற்கொள்கின்றனர். பரிக்கிரமா முடிந்து திரும்பும் வரை, இஸ்கான் கிருஷ்ண பக்தர்கள் பட்னி விரதம் இருப்பர். வழியில் கிருஷ்ண, பலராமன் கோயில், மதன் மோகன் கோயில், தேவிகாராணி கோபால், உட்பட ராதா கிருஷ்ணன் காதல் லீலை சார்ந்த பல இடங்கள் வரும்!
ஓம்காரேஸ்வர் பரிக்கிரமா
மத்திய பிரதேசத்தில் உள்ள ஓம் காரேஸ்வரர் கோயில், ஓம் தீவில் உள்ளது. இங்கு நர்மதா இரண்டாக பிரிந்து ஓடி, ஓம் போன்ற ஒரு தீவை உருவாக்கியுள்ளது. நர்மதாவின் இருபக்க பிரிவு கரையை ஒட்டியே இந்த பரிக்கிரமா நடக்கிறது. 7 கிலோ மீட்டர்! வழியில் கோபால்கள். பிரம்மாண்ட சிவன் சிலை.. பாழடைந்த கோயில்கள் என பல உள்ளன.
நவதீப் பரிக்கிரமா
மேற்கு வங்காளத்தில், “மா’’ மற்றும் “ராஷ் பூர்ணிமா’’ சமயத்தில் நடக்கிறது. இங்கும் கிருஷ்ண பக்தர்கள் பரிக்கிரமா செய்கின்றனர்.
ராஜிராதா
