- சன்னசி நல்லூர்
- அரியலூர்
- சன்னாசிநல்லூர் அரசு தொடக்கப்பள்ளி
- செந்துறை ஒன்றியம்
- அரியலூர் மாவட்டம்
- பிரேமா
அரியலூர், ஜன. 29: அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் சன்னாசிநல்லூர் அரசு தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தால் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. போராட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவர கோரி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரேமா தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் துணைத் தலைவர் கோகிலா, மற்றும் உறுப்பினர்கள் சத்தியா, உமா, சிவரஞ்சனி, பாக்கியலட்சுமி, வித்யா , அருணா உள்ளிட்டோர் உரையாற்றினார். பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பாக பரமகுரு சிறப்புரை ஆற்றினார்.
